காட்சிப் பொருளா நேர்மையும், அன்பும்???
  • 14:57PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:57PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

முன்பெல்லாம் நேர்மை, அன்பு என்பது எங்கும் நம்மால் பார்க்க, நேரடியாக அனுபவிக்கவும் கூட முடிந்திருக்கிறது.  ஆனால், போன தலைமுறையில் செய்த சில தவறுகளால் நேர்மை, அன்பு போன்றவை இன்று மிகவும் காண்பதற்கு அரிதான பொருளைப் போலப் பார்க்கப்படுகிறது.  சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்தல் பற்றி சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலுமாகக் கலாய்க்கப்பட்டிருந்தது.  நிஜமாகவே அவர் அப்படிப்பட்டவரா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அவர் சிரித்து சந்தோஷமாக இருந்த எவரையும் கட்டிப்பிடித்துப் பார்த்தது இல்லை எனும் போது நமது கவலை கேள்வியெழுப்புகிறவர்கள் மீது திரும்புகிறது. 

அன்பு என்ற ஒன்றை அனுபவித்திராதவர்களா, இல்லை வேண்டுமென்றே, எனக்கு கிடைக்கல அதனால கிடைக்கிறவனைக் கலாய்க்கிறேன் மென்டாலிட்டியா??? ஒருவன் பேருந்தில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடிவாங்கினால் அதில் எத்தனைப் பேர் உண்மையில் அந்தப் பெண்ணின் மீதுள்ள அக்கறையில் அடித்தார்கள் என்பது யாருக்குத் தெரியும்???  இதைப் போலவே நேர்மையும்… நேர்மையாக இருந்ததாலேயே நிறையப் பேர் ஹீரோவாகப் பார்க்கப்படுவது புரிந்தாலே, நாம் எந்தளவுக்கு நேர்மைக்காகக் காய்ந்து போயிருக்கிறோம் எனப் புரியும்.

ஏன் இந்த நிலைமை என்று ஒரு விரலை நாம் யாரையாவது நோக்கி நீட்டினால் மீதம் மூன்று விரல்களும் நம்மைத் தான் சுட்டிக் காட்டும்.  நமது ஒரே பிரச்சினை நாம் குப்பையை அள்ளிப் போடுவதற்கு கூட ஒரு ஹீரோ வேண்டுமென்று எதிர்பார்க்கத் துவங்கி விட்டோம்.  அதில் ஒரு கேவலமான பின்குறிப்பு – அந்த ஹீரோ நாமாக இருக்கக் கூடாது என்பதே.  நமது பெற்றோர் நமக்கு என்ன சொல்லி வளர்த்தார்கள் என்பதில்தான் இருக்கிறது.

நல்லவனை விட வல்லவனாக இரு… இந்தப் பழமொழி சொல்லப்பட்ட காரணம் வேறு… ஆனாலும், தற்போதைய நிலையில் வல்லவன் என்பது பணம் சம்பாதிக்கத் தெரிந்தவன் என ஆகிவிட்டதால் நாமும் வெறும் பணம் பண்ணும் இயந்திரங்களாகவே மாறிப் போய்விட்டோம்.  ஹீரோ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட, நமது மரபணு வழி வந்த போன தலைமுறையின் பதிவுகள் என்பது ஜீரணிக்கச் சற்றே சிரமமான விஷயம்தான்.  இதனால் தற்போது காட்சிப் பொருளாக இருக்கும் அன்பும் நேர்மையும் விரைவில் வழக்கொழிந்து, அந்த ஜீன் பதிவுகள் நீங்கும் நேரத்திய தலைமுறைக்கு இப்படியான வார்த்தைகள் இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போய்விடும்…        

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top