அதிர்வும், ஆற்றலும்…
  • 08:58AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:58AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும், நாம் எப்போதும் அதிர்வலைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் என்பது??? நம்மைச் சுற்றி ஒரு எலக்டரோ மேக்னடிக் கவசம் ஒன்று எல்லா நேரத்திலும் இருக்கிறது என்பது விஞ்ஞான ரீதியாக உண்மையான ஒன்று.  இவற்றின் அதிர்வுகளில் ஏற்படும் வித்தியாசமே நம்மை பாசிட்டிவாகவும், நெகட்டிவாகவும் உணர வைக்கிறது என்பது நிச்சயமாக நம்மில் பலருக்குத் தெரியாது. அதன் காரணமாகவே கோவில்கள் நமக்கு நிம்மதியையும், சந்தைகள் நமக்கு எரிச்சலையும் தருகிறது. எப்படி?

முதலில் கோவிலுக்கு வருவோம். அங்கு நம்மைப் போலவே பலரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.  கோவிலுக்குள் அவர்களது மனம் ஒரு நிலைத்தன்மை (focus)க்கு வரும். கூடுமானவரை தீய எண்ணங்களைத் தவிர்ப்பார்கள்.  இவர்களது மனம் அடுத்தவரைக் குற்றம் சொல்லாது, தனக்குத் தேவையானதை யோசிக்கத் துவங்கும்.  இதே ஒரு சந்தையை எடுத்துக் கொள்ளுங்கள்.  “பேரம் பேசுவான் போலிருக்கே…” என்று ஆரம்பித்து, “இன்றைக்கு யாருகிட்டயும் ஏமாந்துவிடக் கூடாது” என்பது வரை பலவித எண்ணங்கள் நமக்கும் இருக்கும், நமக்கு முன்னாலும் கடந்திருக்கும்.  இதன் காரணமாகவே, கோவிலுக்குள் செல்லும் மனம் சட்டென்று இலகுவாக மாறி நிம்மதியடைகிறது. அதே மனம் சந்தைக்கு செல்லும்போது பரபரப்பாக சட்டென எரிச்சலடையவும் செய்கிறது.

மன்னன் ஒருவனுக்கு நகர்வலம் போகும் போதெல்லாம் ஒரு சந்தனக்கட்டை வியாபாரியைப் பார்க்கும்போதெல்லாம் அடித்துக் கொல்ல வேண்டுமென்கிற அளவுக்கு வெறுப்பாக இருக்குமாம்.  மந்திரியிடம் சொல்ல, மறுநாள் நகர்வலத்தின் போது அவனைப் பார்த்தால், மிகுந்த மகிழ்ச்சி தோன்றியதாம் மன்னனுக்கு… மந்திரியிடம் கேட்க, சந்தனக்கட்டை வியாபாரமில்லாததால் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் மன்னன் இறந்தால் சந்தனக்கட்டையை பூராவும் விற்றுக் காசாக்க விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவே அவனைப் பார்க்கும் போதெல்லாம் உங்களை அறியாமல் அவன் மீது வெறுப்பு வந்தது.  நேற்று மன்னன் இன்னும் ஒரு வருடத்திற்கு அந்தப்புறம் முழுவதும் உன்னிடம் வாங்கும் கட்டைகளைத்தான் வைக்க வேண்டுமென்று சொன்னார் என்று அனைத்தையும் வாங்கி விட்டேன்.  இப்பொழுது அவன் எவ்வளவு நல்லவர் நம் மன்னன் என்று நினைக்கிறான்.  அவன் மகிழ்ச்சி உங்களுக்கும் தொற்றி, நீங்களும் மகிழ்கிறீர்கள் என்றானாம் மந்திரி.

நமது வெற்றி தோல்வியும் அந்த மன்னனைப் போல, நம் எண்ணங்களால் மகிழ்ந்து அருகில் வருவதும், அதே எண்ணங்களால் விலகிக் காணாமல் போவதும் நடக்கும்.  இதைத் தொட்டே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - நினைப்பதெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.  இனியும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டு, சோர்ந்து போகாதீர்கள்.  கோவிலாக இருப்பதா அல்லது சந்தையாக இருப்பதா என்பது உங்கள் மனதை நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து.

வெற்றியின் முதற்படிக்கு வாழ்த்துகள்… 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top