டீ கடை நட்பு - பசங்களின் மீட்டிங் பாயிண்ட்!
  • 10:34AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 10:34AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

coffee-shop.jpg

 

நாம ஈவினிங் வெட்டிய இருகப்பவும் சரி டையார்ட் இருக்கமோதும்  சரி,தலை வலிக்கறப்பவும் சரி டக்குனு ஒரு டீ,காபி போட்டு குடிப்போம்..இதுவே வெளில இருந்த பக்கத்துல  ஒரு டீ கடைக்குதான் போவோம்.. இந்த மாதிரி டீ கடைங்க நிறைய பார்க்கற இடம் முழுக்க இருக்கு.

இந்த மாதிரி  டீ கடைக்கு ரெகுலரா  வேலை செய்றவங்க,வயசு பசங்க போவாங்க...சிலர்  டி,காபி குடிப்பாங்க,சிலர் தம் அடிப்பாங்க சிலர்  பஜ்ஜி, போண்டா சம்பர்ல போட்டு சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. டீகடைக்கு போறவங்க சீக்கரம் போனாலும் வர்றது  லேட் ஆகும்!..

friendship-in-tea-kadai--3671655328.jpg

பொதுவா அப்படி டீ கடைல பசங்கள பாக்கறவங்க சைட் அடிக்கறாங்க, டீ கடைல ஒக்காந்து வெட்டி கதை பேசறாங்க,கும்பல் சேந்துட்டாங்கனு தப்பான கண்ணோட்டத்துலயே பாப்பாங்க..ஆன உண்மையிலேயே அப்படில ஒன்னுமே இல்லைங்க!!...சைட் அடிக்கற பசங்க அடிப்பாங்க இல்லனு சொல்லல ….ஆன மத்தவங்க அப்படி இல்லையே!! அங்க பொழுது போலன்னு ஒன்னு சேருற பசங்க அடிக்கற கமெண்ட்ஸ், ஜோக்ஸ்,கல்லாய்க்கறதா எத்தனை கலக்க போவது யாரு? வந்தாலும் தொடகூட முடியாதுங்க!!..வேளைக்கு போறவங்க மீட்டிங் பாயிண்ட்  டீ கடைதாங்க..! அன்னிக்கி நாள் நடந்தத,அவங்க நண்பர்கள் கூட பகிர்ந்துக்கற மாதிரி வரதுங்க..என்னதான்  சோகம்,கஷ்டம் மனசுல இருந்தாலும் அங்க போயிட்டு ஒரு டீ குடிச்சிட்டு பேசிட்டு வந்ததும் ஒரு புத்தூணர்ச்சி,நிம்மதி வரும் பாருங்க!! வார்த்தை இல்ல சொல்ல..

tea-kadai-bench-podhum-da--699075120.jpg

டீ கடையும் ஒரு வகுப்பறை மாரிதான்.. சில கல்லூரி பசங்களுக்கு!!...ஊரவிட்டு வந்து ஒரு காலேஜ்ல படிக்கறது ரொம்ப கஷ்டம்!..என்னதான் தனியா ரூம் எடுத்து தங்கினாலும் அந்த ரூம்ல எவளோ நேரம் இருக்கமுடியும்?? ...அப்படி ஈவினிங்  வெளிய வந்து டீ  குடிச்சிட்டு,அந்த சேட்டா கிட்ட பேசிட்டு அங்க ஒரு கால்மணிநேரம் இருந்தாதான் அன்னிக்கி நாளே ஓடும்...நிறைய பசங்களுக்கு இதெல்லாம் இப்போ பக்க வேடிக்கையா இருக்கும்..பத்துவருஷம் அப்பறம் ஒண்ணா பேசி சிரிக்கரப்ப இதெல்லாம் தான் ஞாபகமா சுத்திவரும்..!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top