WOMENS DAY: பெண்களும், பணியிடங்களும்!!! ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும்!!!
  • 12:25PM Mar 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:25PM Mar 08,2019 Chennai

ஆண்களுக்கு நிகரான உரிமைகளைக் கேட்டு பெண்கள் போராடியதை கௌரவிக்கும் விதமாக இன்று மார்ச் 8-ம் தேதி உலக அளவில், INTERNATIONAL WOMENS DAY கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் இந்த நாளைப் போற்றி வருகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகராக பணிக்குச் சென்றாலும் மகளிருக்கு சமஉரிமை, ஊதியம் அளிக்கப்படுகிறதா என்பது இன்றுவரை கேள்விக் குறிதான். சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை. இவைகளில் தொடங்கி சமையலறை வரை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் பெண் உரிமை. தன் வீட்டில் இருக்கும் பெண்களை வேலைக்கு அனுப்பும் ஆண்‌கள், தங்களுக்கு நிகராகத் திறமையாக பணியாற்றும் பெண்ணுக்கு சமஉரிமை தருகிறார்களா என்றால் இல்லை என்கிறது ஆய்வு. இது மட்டுமல்ல, தன்னை விட அதிகமாக உழைக்கும், வெற்றி பெறும் பெண்களை எதிரிகளாக பாவிக்கும் மனோபாவமும் தீரவில்லை என்பதுதான் உச்சக்கட்ட கொடுமை.

ஊதியத்திலும் பெண்களுக்கு சமஉரிமை கிடைக்கிறதா என்றால் சராசரியாக 19 சதவிகிதம் குறைவான ஊதியமே கிடைப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. MONSTER INDIA நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஆண்களின் சராசரி ஊதியம் 242 ரூபாய் 49 காசுகள் இருப்பதாகவும் பெண்களுக்கு 196 ரூபாய் 30 காசு ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆண்களை விட பெண்கள் சராசரியாக 46 ரூபாய் 19 காசு சம்பளம் குறைவாக பெறுகின்றனர் என தெரிய வந்துள்ளது. இயல்பாகவே சேவை மனப்பான்மை அதிகமுள்ள பெண்களைப் பின்தள்ளி சேவைத் துறையிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சமூக சேவை, சுகாதாரச் சேவை உள்ளிட்‌‌ட துறைகளிலும் பெண்களை விட 21 சதவிகிதம் கூடுதலாக ஆண்களே ஊதியம் பெறுவதாக MONSTER INDIA தெரிவித்துள்ளது. ONLINE மூலம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் பணியில் பாகுபாடு காட்டப்படுவதாக 60 சதவிகித பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திருமணமான பின்னரே இந்தப் பாகுபாடு எழுவதாக பெண்கள் வெளிபடுத்தியுள்ளனர். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது 46 சதவிகித பெண்கள் வேலையை விட்டுவிடலாம் என்ற உணர்வு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். அலுவலக பணி நேரம் முடிந்த பின்னும் பணியாற்றும் ஆண்களைப் போல் தங்களால் முடியவில்லை என்பதை நம்புவதாக 46 சதவிகித பெண்கள் MONSTER INDIA நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்றனர் என்ற கூற்று இருந்தாலும், பணியில் அவர்களுக்கு கிடைக்கும் உரிமை இன்றளவும் குறைவு என்பதே MONSTER INDIA நடத்திய ஆய்வில் தெரிகிறது. இது போதாதென்று தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளிக்கு கொண்டு வந்து CHARACTER ASSAINATION செய்வது உட்பட பல்வேறு நேரடியாகப் பணி சாராத பிரச்சினைகளிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது இன்னும் குறைந்தபாடில்லை. பணியில் பாலியல் சீண்டல்களை ஆண்களுடன் வேலை பார்க்கும் பெண்களில் ஏறக்குறைய அனைவருமே ஒருமுறையேனும் அனுபவித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் அருவருப்பு.

DELOID என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த 2005-ம் ஆண்டில் பணிபுரிபவர்களில் 36.7 சதவீதம் பேர் பெண்களாக இருந்ததாகவும், 2018-ம் ஆண்டில் அது 26 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைப்புச்சாரா துறைகள் மற்றும் ஊதியமற்ற வேலைகளில் சுமார் 19.5 கோடி பெண்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி கிடைக்காதது, தகவல் தொழில்நுட்ப இடைவெளி போன்றவை பெண்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஒருவகையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் பெண்களுக்கு தடைக் கற்களாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. எனினும் இந்த நிலையை மாற்ற இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. உன்மையாகவே, INTERNATIONAL WOMENS DAY-வை வாழ்த்திப் பதிவு போடும் ஆணாக இருந்தால், கூடவே இது போன்ற தொந்திரவுகளையும், செய்லபாடுகளையும் தங்கள் அளவிலாவது நிறுத்திக் கொள்வோம் என்ற மனதார ஒரு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். காரணம், இன்றைய பெண்களுக்கு மிகவும் தேவையானது தன்னைச் சுற்றி உள்ள ஆண்களின் பரிவு மற்றும் புரிதல் மட்டுமே!!! HAPPY INTERNATIONAL WOMENS DAY!!!

Top