#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா? விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை!
  • 13:28PM Aug 19,2019 Russia
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:28PM Aug 19,2019 Russia

கஜகஸ்தானிலுள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து ரஷ்யா விண்வெளி தொலைநோக்கி ஒன்றை ஜெர்மனி நாட்டுடன் இணைந்து செலுத்தியுள்ளது. இதற்கு Spektr-RG என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 2011இல் ஏவப்பட்ட தொலைநோக்கி Spektr-Rபோல் இதுவும் ஒரு விண்வெளி நோக்குநிலையம்(space observatory) ஆகும். அதைப் போலவே இதுவும் கருந்துளை,நியூட்ரான் ஸ்டார்ஸ் மற்றும் காந்தப் புலம் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

ரஷ்ய நாட்டின் பெருமைக்கு நீண்ட காலமாக அதன் விண்வெளி திட்டங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. 2011-லிருந்து சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு(international space station) குழுக்களை அனுப்பும் திறமை பெற்ற ஒரே நாடு ரஷ்யா மட்டுமே. ஆனால்அண்மைக் காலங்களில்  ரசிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோமோஸ் உள்ளே நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அமெரிக்க எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போட்டி ஆகியவற்றால் அதன் ஏகபோகம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஜூலை 20ஆம் தேதி ஒரு ரஷ்ய விண்வெளி வீரருடன் ஒரு இத்தாலி மற்றும் அமெரிக்க வீரர்களை சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு (international space station) அனுப்ப உள்ளது. இதிலும் அடுத்த போட்டியாக அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள ‘made in space’ என்கிற நிறுவனத்திற்கு நாசாவின் 73 மில்லியன் டாலர்  தொகைக்கான காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது.

அர்கிநாட் எனும் சிறிய விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் விண்கலத்தின் பாகங்களை 3 டி பிரிண்ட் முறையில் கட்டமைக்கப்பதற்காகவே  இந்த ஒப்பந்தம். இந்த விண்கலம் இரண்டு பக்கங்களிலும் 32அடி நீளமுள்ள இறக்கைகளை 3 டி முறையில் அச்சுவார்க்கும். 2022ஆம் ஆண்டிற்குள்ளாகவே இது தயாரிக்கப்பட்டுவிடும் என்று நாசா கூறுகிறது. | #Candy Cloud: ஆச்சரியம் ஆனால் உண்மை!! உங்கள் காஃபி கப் மேலே ஓர் மேகமூட்டம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top