எங்க தலைவர்டா!!
  • 06:04AM Oct 05,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 06:04AM Oct 05,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்று,நமக்கு நம் பக்கத்து வீட்டில் இருப்பவர் யார் என்று கேட்டாலும் சிலர்க்குச் சரியாக தெரியாது.!.ஆனால் ஒருவரை பற்றி கேட்டால்,இந்தியா முதல் ஜப்பான் வரை,ஏன் ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியும்..!! அவர் வேறு யாரும் அல்ல நமது தலைவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த” அவர்கள் தான்!! திரு எம்.ஜி.ராமச்சந்திரர் காலத்திலிருந்து இன்று வரை அனைவருக்கும் பிடித்த சிறந்த மனிதர் அவர் ஒருவர்தான்!!

 

வயதாகிவிட்டது என்று எண்ணி இன்று பலர் அவரைக் கேலிசெய்கிறார்கள்..,ஆனால் அந்த மாமனிதர் பற்றி சரியாகத் தெரியாதவர்களே இப்படிச் செய்கிறார்கள்!,ஒன்று புரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் மூன்று தலைமுறைகளாக மக்கள் மனதில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல!! பல நட்சத்திர நடிகர்கள் ஆள் தெரியாமல் போன கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க..தன்னை அறியாது அவரை இகழ்ந்து பேசுபவரும்,இன்னும் சிலர் தன்னைத் தமிழன் என்று மார்தட்டி கொண்டு சுத்தித்திரிபவர்களால் அவரின் சிறப்பு குறையப்போவதும் இல்லை…

wp_ss_20150821_0003.jpg

அரசியலுக்கு வரப்போவதைப் பற்றி பலர் கலாய்த்து பேசுகின்றனர்,ஆனால் வெள்ளம் வந்தபொழுது தமிழக மக்களுக்கு பல உதவிகள் செய்தும்,அவர் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அவர்கள்,ஏன் ஓட்டுப்போட்டுச் சட்டசபைக்கு அனுப்பிய அரசியல்வாதிகளைக் எதுவும் கேட்கவில்லை?? அவர் அதற்கு ஒன்றும் செய்யவில்லை,இதற்கு ஒன்றும் செய்யவில்லை என்று பேசும் மக்கள் என்றாவது கடன் கேட்பவர்களுக்குத் தானமாக தருவார்களா??!

wp_ss_20150706_0004.jpg

என்னதான் இவ்வளவு மக்கள் அவரை இகழ்ந்து பேசினாலும் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.,காரணம் இவர்களின் இகழ்ச்சியால் அவரின் மரியாதை குறையப்போவதும் இல்லை!.,அவர் ரசிகர்கள் அவர்மேல் வைத்துள்ள அன்பு மாறப்போவதும் இல்லை!.முதல் நாள் படம் பார்த்து ரசிகர் என்று கூறுபவர்கள் அல்ல நாங்கள்..,தலைவரின் மூன்றாம் நாள் காட்சிக்கும் முதல் நாள் போன்று பார்ப்பவர்கள் நாங்கள்!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top