Terraforming – என்றால் என்ன???
  • 09:20AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:20AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படுவதற்காக ஆட்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா.  இது ஒரு ஒரு வழிப் பயணம் எனத் தெரிந்தும் கூட லட்சக்கணக்கானோர் அதற்கு விண்ணப்பித்ததும், அதிலிருந்து தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.  பொதுவாக நாம் அறிந்த விஷயம் அங்கே சென்று அவர்கள் குடியமர்த்தப் படப் போகிறார்கள் என்பதுதான்.  அதையும் தாண்டி அவர்களுக்கு அங்கே ஒரு மிக முக்கியமான வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அது – Terraforming.

Terraforming என்பது சரியாகச் சொல்லப் போனால் ஒரு கிரகத்திற்கு உயிரூட்டுவது.  மனிதர்களுக்கே நம்மால் உயிர் கொடுக்க முடியவில்லை. கிரகத்திற்கு எப்படி உயிர் கொடுக்கப் போகிறார்கள் என்று கேட்டால், அதைப் புரிந்து கொள்ளப் பூமியில் உயிர்கள் தோன்றியதன் முதல்படி எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஓரணு உயிரினங்களான மைக்ரோப்ஸ் தான் உலகில் முதலில் தோன்றிய உயிரினங்களாகக் கருதப்படுகிறது. இவை எப்படி உருவானது என்பதைப் பற்றி இன்னமும் சரிவரத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  வேற்றுக் கிரகவாசிகளை நம்புபவர்கள், விண்வெளியில் இருந்து வந்தவர்கள் எந்தக் கிரகம் உயிர் வாழத் தகுதியுள்ளது என்பதை அறிய, (நம்மைப் போல) பூமியில் கற்களால் ஆன பந்துகளின் மூலம் இவற்றை விதைத்ததாகக் கூட சொல்லப்படுகிறது. இவை கொஞ்சம் கொஞ்சமாக பல்லணு உயிர்களாக மாறத் துவங்கியது.  இவர்களின் வளர்சிதை மாற்றம் காற்றையும், பின்னர், நீரையும் படைத்தது… அதன் பிறகு தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகள் பரிணாம வளர்ச்சி பெற்றது.  இதுதான் Terraforming.

இதன் மூலம் செவ்வாயில் காற்றையும், நீரையும் உற்பத்தி செய்ய முடியமா என்பதை ஆராய்ச்சி செய்யத்தான் இத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஏடுத்துக் கொண்ட பரிணாம வளர்ச்சியின் முதல் தேவையான ஒரு கிரகம் இருக்கிறது, தற்போதைய பரிணாம வளர்ச்சியில் உச்சமாக இன்று நாமும், நம்மைச் சுற்றி வாழும் விலங்குகள், செடி கொடிகள், பூச்சிகள் இருக்கின்றன. மிச்சத் தேவை காற்றும், நீரும் மட்டுமே… சாத்தியப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…  

Top