Misc

தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா? தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா? இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க!

Oct 24 2020 11:03:28 AM

ஊர்ப்பக்கம் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்து விற்பது வெகு பிரபலம். 'ஜெயம் படத்தில் ரவி எடுப்பாரே? அப்படியா?' அப்படி இல்லை! காட்டில் இருந்து தேன் கூட்டை எடுத்து வந்து, தெருவில் கடை போட்டு விற்பார்கள். நேரடியாக தேனை கூட்டிலிருந்து எடுப்பார்கள். அதில் தேனீக்கள் செத்து மிதங்குவதை கண்கூடாக பார்க்கலாம். ஒரு துளி தேனை எடுத்து நீரில் போட்டால், பாதரசம் போல உடையாது இருக்கும். இப்படி கடை அருகில் தேனீ பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.

original-honey honey-bee

அது என்னவென்றால், தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காதாம். என்னது, இந்த அளவிற்கு தேனீ கொட்டுபவர்களை நோட் செய்யுமா? என்ற சந்தேகத்தோடு தேன் வியாபாரிகள் பேசிக்கொள்வதை கேட்டு கொண்டிருந்தேன். 

original-honey honey-bee

அதாவது சில தேனீக்களால் ஒருமுறை தான் கொட்ட முடியுமாம். அதை தான் பலர் 'தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தாக்காது' என தவறாக புரிந்து வைத்துள்ளனர். 

original-honey honey-bee

உதாரணத்திற்க்கு ராணி தேனீயின் கொடுக்கானது மிகவும் பெரிதாக இருக்கும். ஒருமுறை தான் தா க்கும் என சொல்ல முடியாது. ஆனால் ராணி தேனீ பெரும்பாலும் தா க்காது. ஏனெனில், அவை கூட்டை விட்டு வெளியே வராது. அடுத்து ஆண் தேனீ, அளவில் பெரியதாக இருந்தாலும் ஐயாவுக்கு கொடுக்குகள் கிடையாது. ஆதலால் கொட்ட வாய்ப்பில்லை.

original-honey honey-bee

அடுத்து உள்ளது வேலைக்கார தேனீ, இவருக்கு கொடுக்குகள் சிறியதாக, மென்மையாக இருக்கும். இவை தான் மனிதனை கடிக்கும். இவை மனிதனை கொட்டும் போது, இவற்றின் கொடுக்குகள் மனிதனின் த சைகளில் மாட்டிக்கொள்ளும். பின்னர் தசைகளில் இருந்து வெளியேறும் முயற்சியில் அவற்றின் இறுதி உ டல் உ றுப்புக்கள் சேதம் அடைகின்றன. இதனையடுத்து அவை இ றக்க நேரிடுகிறது, சிலவை தப்பி பிழைக்கவும் செய்கின்றன. இதனால் தான் தேனீ கொட்டிய மனிதரை மீண்டும் தாக்காது என கூறுகிறார்கள், ஏனென்றால் கொட்ட கொடுக்கு வேண்டுமே!