Misc

வீட்டில் எந்த செடி வைத்தாலும் பட்டு போய்விடுகிறதா? இதெல்லாம் கூட காரணமாக இருக்குமா? பாட்டி சொல்லும் திகில் சம்பவம்!

Oct 14 2020 10:10:03 AM

வீட்டில் எந்த செடி வைத்தாலும் பட்டு போய் கொண்டே இருக்கிறது. 'வளமான மண் தான் ஆனாலும் செடி செழிப்பாக வளர்வதில்லை' என பாட்டி சஞ்சலம் பட்டுக்கொண்டே இருக்கிறார். வீட்டில் ஏதாவது தீ ய சக்தி இருந்தால் கூட இப்படியெல்லாம் நடக்கலாம் என வீணாக பயப்படுகிறார்கள். இதெல்லாம் மூட நம்பிக்கை என சொன்னால், 'நீ சின்ன பையன், உனக்கு என்ன தெரியும்? மூட நம்பிக்கை என்றால், பிறகு எதற்கு துளசி செடியை சாமியாக நினைத்து சுற்றணும்' என திருப்பி கேள்வி கேட்கும் போது, சரியாத்தானே இருக்கு லாஜிக்கு? என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

growing-plants edible-garden

நம்மக்கள் எல்லாவற்றையும் மனதோடு நெருக்கமாக தொடர்புபடுத்தி கொள்வதால், சாதாரண செடி பட்டு போனால் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். மண் செழிப்பாக இருந்தும் செடி பட்டு போகிறது, இதற்கு என்ன செய்வது?

growing-plants edible-garden

நாம் தினமும் உண்ணும் பழவகைகளின் தோலை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக உலரவிட்டு, பின்னர் நீரில் நன்றாக ஊறவிடுங்கள். ஒருவாரத்திற்கு பின்னர் இந்த நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். 

growing-plants edible-garden

பின்னர் ஸ்ப்ரேயர் மூலம் தினமும் விதை போட்ட இடத்தில் தெளியுங்கள். வெங்காயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரை தெளித்தாலும் நல்ல பலன் கிடைக்கிறது. மாதம் இருமுறையாவது சாம்பல், மண்புழு உரம், வீட்டு காய்கறி கழிவு என இவற்றை எல்லாம் மக்கவைத்து செடியில் இட்டு வந்தால் இன்னும் சிறப்பு. 

growing-plants edible-garden
 
மேற்சொன்ன செய்முறையில் NPK என கூறப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ஒரு மாதத்திலே பட்டு போன செடிகள் நன்றாக வளரும். தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் செய்தால் செடிகள் செழிப்பாக வளர்ந்து உங்களை வரவேற்கும். வீண் பயத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.