Exquisite

இயற்கையின் படைப்பில் இப்படி ஒரு விநோதமா? உண்மையில் இவ்வளவு ஆபத்து நம்மிடையே இல்லை

Apr 15 2021 09:25:00 PM

இயற்கையின் படைப்பில் சில தாவர உண்ணிகளாகவும் சில மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன. ஆடு, மாடு, முயல், மான் போன்ற விலங்குகள் தாவர உண்ணிகளாகும். சிங்கம், புலி, சிறுத்தை, முதலை, சுறா மீன் என்று ஏகப்பட்ட மாமிச உண்ணிகளும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தாவரங்களை உண்ணும் பூச்சிகளை கண்டிருப்போம். ஆனால் பூச்சிகளை உண்ணும் தாவரத்தை பற்றி கேள்விப்பட்டதுண்டா ?

insects-killer

வீனஸ் ஃப்ளைட்ராப் என்றொரு தாவரம் உள்ளது. இது சில பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் துணை வெப்ப மண்டல ஈர நிலங்களில் இந்த தாவரம் வளர்கிறது. ஈக்கள், சிலந்தி அல்லது குளவி போன்ற பூச்சிகளை இந்த தாவரம் உண்ணும் என்று கூறப்படுகிறது. எறும்பு இதன் மேல் ஏறினால் அதையும் இந்த தாவரம் சாப்பிடுகிறது.

insects-killer

ஏதாவது ஒரு பூச்சி இதன் மேல் உட்காரும்போது மூடி போன்ற ஒரு அமைப்பு அந்த பூச்சியை உள்ளே தள்ளி மூடிக்கொள்கிறது. பூச்சி வெளியே வரமுடியாதபடி இந்த தாவரத்தில் பசை போன்ற திரவம் ஒன்று சுரந்து பூச்சியை தன்னுடன் ஒட்டிக்கொள்ள வைக்கிறது. இதன் மூலம் பூச்சியானது முழுவதுமாக அந்த தாவரத்திற்குள் மூடப்பட்டு அதற்கு இரையாகி விடுகிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த தாவரம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.