#TourisminTn - வாழ்க்கையில் ஒருமுறையாவது சுற்றுலா சென்று பார்க்கவேண்டிய தமிழகக் கோட்டைகள்!
  • 13:31PM Apr 19,2019 Tamil Nadu
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:31PM Apr 19,2019 Tamil Nadu

பொதுவாகத் தமிழகத்தில் சுற்றுலா என்றதும் நமக்கு ஊட்டி,கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்கள் ஞாபகத்துக்கு வரும். இதைத் தவிர்த்துக் கோவில்கள், பூங்காக்கள், கோட்டைகள் போன்றவை ஞாபகத்துக்கு வரும். இதில் கோட்டைகள் என்றதும் நமக்குச் சென்னை ஜார்ஜ் கோட்டை, வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை போன்றவை மட்டும் தான் பரிட்சயம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற கோட்டைகள் பற்றி நமக்கு அவ்வளவு விவரம் தெரியாது. இந்தப் பதிவில் நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, தமிழகத்தில் பிரபலமில்லாத சில வரலாறு சிறப்புமிக்கக் கோட்டைகள் பற்றிப் பார்ப்போம்.

#1 தரங்கப்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை - கிழக்கு கடற்கரையின் இனிய அலை ஓசையில், வரலாற்றின் பல சுவடுகளைத் தனக்குள் வைத்துக்கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கிறது தரங்கப்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை (Fort Dansborg). இங்கிலாந்துக்காரர்கள் மெட்ராஸில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்கு முன்பே 1620-ல் டச்சுக்காரர்கள் இங்கு இந்தக் கோட்டையை அமைத்து வியாபாரம் செய்துவந்துள்ளனர். டென்மார்க்கில் உள்ள Kronborg கோட்டைக்குப் பிறகு டச்சுக்காரர்கள் கட்டிய 2-வது பெரிய கோட்டை இதுவாகும். கோடைகாலத்தில் மதிய நேரம் இந்தக் கோட்டையில் நேரம் செலவழிப்பது தனி இன்பத்தைத் தரும். சுட்டெரிக்கும் வெயிலில், கடலின் குளுர்ச்சிக்காற்று உங்கள் மனதில் இன்பத்தை உண்டாகும்.

Image result for dansborg fort wallpaper

#2 ஓசூர் பகுதியில் உள்ள இங்கிலாந்து கோட்டை - ஓசூரில் உள்ள Kenilworth Fort பற்றிச் சிலருக்கு மட்டுமே தெரியும். மாலை நேரம், இந்தக் கோட்டையைச் சுற்றி சந்தோஷமான நினைவுகளுடன் ஒரு குட்டி நடைபோட்டால் அவ்வளவு இன்பமாக இருக்கும். சுற்றுலா சென்று பார்க்க சிறந்த இடமாக இருக்கும் இந்தக் கோட்டை, இங்கிலாந்தின் புகழ்பெற்ற Kenilworth கோட்டையின் கட்டிடகலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. 1859-ம் ஆண்டுச் சேலம் மாவட்டத்துக்குக் கலெக்டராக இருந்த Mr. Brett, அவரது மனைவியின் விருப்பத்துக்காக இந்தக் கோட்டையைக் கட்டியுள்ளார். ஓசூர் பகுதியில் இதனை Brett's Fort என்று அழைப்பார்கள்.

Image result for Kenilworth Fort (Hosur) now

#3 நீலகிரியின் Droog Fort - மலைமாவட்டமான நீலகிரியில் திப்பு சுல்தானின் நினைவை அடையாளமாகக் கொண்டிருக்கும் Droog Fort தற்போது பராமரிப்பு இன்றிக் காணப்பட்டு வருகிறது. தற்போது எஞ்சிய பாகத்துடன் காணப்படும் இந்தக் கோட்டையை 18-ம் நூற்றாண்டுகளில் திப்புச் சுல்தான் போர் நேரங்களில் பயன்படுத்தி வந்துள்ளார். வரலாற்றுச் சுவடுகளுக்கு மட்டுமின்றிச் சுற்றுலா செல்ல இந்தப் பகுதி சிறந்ததாகும். இந்தக் கோட்டையைச் சுற்றி தற்போதும் சில அரிய வகைப் பறவைகள் வாழ்வதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். பார்வை விரும்பிகளுக்கு இந்த இடம் நிச்சயமாகப் பிடிக்கும். அதுமட்டுமின்றித் தேயிலை தோட்டம், டிரெக்கிங் செய்ய வசதிகள், வனவிலங்குகளைப் பார்க்க வசதிகள் என உங்களை ஆச்சர்யப்படுத்த பல விஷயங்கள் இங்குள்ளது.

Image result for droog fort ooty

#4 திண்டுக்களின் மலைக்கோட்டை - 16-ம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டுப் பின்னாட்களில் ஹைதர் அலி, திப்புச் சுல்தான் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டுப் பின்பு ஆங்கிலேயர்களின் பயன்பாட்டுக்கு வந்த திண்டுக்களின் மலைக்கோட்டை தமிழகத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் முக்கிய இடத்தை வகிக்கும். இந்தக் கோட்டையின் உச்சியில் நின்று பார்த்தால் கிழக்கு திண்டுக்கல் நகரத்தின் முழு அழகையும் ஒன்றுசேரப் பார்க்கமுடியும். இங்குச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும், ஆனால் சுற்றிப்பார்க்க பல அற்புதமான விஷயங்கள் இந்தக் கோட்டைக்குள் அமைந்திருக்கும். இந்தக் கோட்டைக்குள் 16-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்கள் வழிபட்ட கோவிலும் அமைந்துள்ளது.

Image result for dindigul fort

#5 குமரியில் புகழ்பெற்ற வட்டக்கோட்டை - கன்னியாகுமரியின் கடலழகுக்கு மேலும் ஒரு அழகாக அமைந்திருக்கிறது இந்த வட்டக்கோட்டை. திருவிதாங்கூர் அரசர்களால் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னாளில் Eustachius De Lannoy என்ற டச்சுகாரரின் கைவசம் வந்தது. குமரியில் உள்ள மற்ற சுற்றுலா தளங்களைப் போல இந்தக் கோட்டையும் தனிச் சிறப்புக்கொண்டது. ஒருபக்கம் கடல், மறுபக்கம் மேற்கு தொடர்ச்சி மலை என இயற்கையெழிலை கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கோட்டை சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும்.

Image result for vattakottai fort

#TourisminTn இந்தப் பதிவில் தமிழகத்தில் சுற்றுலா செல்ல அறியப்படாத சில சிறந்த கோட்டைகள் பற்றிப் பார்த்தோம். இதேபோல நாம் குடும்பத்துடன் சென்று மகிழ சிறந்த இடங்களின் விவரங்களைப் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top