#Helicopter அய்யய்ய...இனி இந்த டிராபிக்ல நம்மளால போகமுடியாது! இதுக்கு ஒரு வழிபன்னுவோம்!
  • 20:39PM Nov 08,2019 Jakarta
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:39PM Nov 08,2019 Jakarta

அவசரத்தில் கிளம்பி மின்னல் வேகத்தில் சென்றாலும் 8 மணிக்கு மெட்ரோ சிட்டி டிராஃபிக்கில் சிக்கினால் போதும், மனிதன் தனது முழுப் பொறுமையையும் இழந்து கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவான். இதேபோலத் தினமும் டிராஃபிக்கில் சிக்கி கடுப்பின் உச்சத்திற்குச் சென்ற இந்தோனேசிய மெக்கானிக் ஒருவர் இனி டிராஃபிக்கில் சிக்கவே கூடாது என்பதற்காக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறார். இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரத்திற்குப் பக்கத்தில் உள்ள சுகபூமி பகுதியை சேர்ந்தவர் Jujun Junaedi.

Image result for jujun junaedi helicopter

42 வயதாகும் இவர் ஆட்டோ ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு முன்பு அடிக்கடி டிராபிக் ஏற்பட்டு மக்கள் நெரிசலில் சிக்கித்தவிப்பதை பார்த்து வெறுப்பாகியுள்ளார், இதுமட்டுமின்றி இவர் கடைக்கு வரும்போதே அடிக்கடி டிராஃபிக்கில் சிக்கிக்கொள்வர். இதனால் கடுப்பின் உச்சத்துக்கே சென்ற Jujun டிராஃபிக்கில் சிக்காமல் நிம்மதியாக வந்துசெல்ல ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார். கடந்தாண்டில் இருந்து கஷ்டப்பட்டுத் தற்போது ஓரளவுக்கு அவரது ஹெலிகாப்டரை வடிவமைத்து உருவாகிவிட்டார். தனது கடையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை வைத்தும், யூடியூப், தான் சிறுவயதில் படித்தது, தனக்கு ஆட்டோ மெக்கானிக்காகத் தெரிந்தது ஆகியவற்றை வைத்தும் இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்து உருவாகிவருகிறார்.

Related image

தனது முயற்சியால் மட்டுமே இந்த ஹெலிகாப்டரை உருவாக்கி வரும் Jujun, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திற்குள் இந்த ஹெலிகாப்டரை தயார் செய்து பறக்க தொடங்கிவிடுவார் என்று கூறுகிறார். இதுவரை இந்த ஹெலிகாப்டர் உருவாக்க 2,138 டாலர் செலவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது சொந்த சேமிப்பில் இருந்து மட்டுமே செலவு செய்து இந்த ஹெலிகாப்டரை உருவாக்குவதாக Jujun தெரிவித்துள்ளார். சுமார் 8 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் தயாராகிவிட்டால் இனி டிராபிக் பற்றித் தனக்குக் கவலையே இருக்காது என்று Jujun கூறுகிறார்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top