#IRCTC என்னதான் இருந்தாலும் டிக்கெட் ரேட் அதுக்குன்னு இவ்ளவா? நாட்டின் முதல் தனியார் ரயில் செய்த அநியாயம்!
  • 18:16PM Oct 14,2019 Uttar Pradesh
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:16PM Oct 14,2019 Uttar Pradesh

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு வழியாக நாட்டின் முக்கியத் துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய ரயில்வே துறையையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 4-ம் தேதி முதல் நாட்டின் முதல் தனியார் ரயிலான டெல்லி - லக்னோ Tejas Express, IRCTC மூலம் செயல்படத் தொடங்கியது.

#pilot : விமானங்களில் விமானியும் , துணை விமானியும் ஒரே உணவை சாப்பிட மாட்டர்கள். அது ஏன் தெரியுமா ?

இதற்காக ஏகப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த முதல் தனியார் ரயில் மீது குற்றம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற போக்குவரத்து துறையை விட ரயில்வே துறையில் பயணக்கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி தனியார் ரயில் தற்போது அதிகளவில் பயணக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. டெல்லி - லக்னோ இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சுமார் 6 மணி 30 நிமிடங்களில் 511 கி.மீ தூரத்தை கடக்கும். இந்தத் தேஜஸ் எக்ஸ்பிரஸின் ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு 2,450 ரூபாயாகவும், கேட்டரிங் உள்ளிட்ட ஏசி சேர் காருக்கு 1,565 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல டெல்லி - லக்னோ இடையே செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் சுமார் 6 மணி 35 நிமிடங்களில் சென்றடையும். இந்தச் சதாப்தி எக்ஸ்பிரஸின் ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு 1,855 ரூபாயாகவும், கேட்டரிங் உள்ளிட்ட ஏசி சேர் காருக்கு 1,165 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஆனால் டெல்லி - லக்னோ இடையே அதேவழித்தடத்தில் ரயில்வே துறையால் இயக்கப்படும் சுஹைல்தேவ் சூப்பர் ஃபாஸ்ட் ரயில், கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் ஏசி சேர் காருக்கான கட்டணம் ரூபாய் 645 மற்றும் 480 மட்டுமே. வெறும் இரண்டு ரயிலுக்கே இப்படிக் கட்டணம் எக்கச்சக்கமாக ஏறியிருக்கும் நிலையில் மீதமுள்ள ரயில்களையும் தனியாரிடம் கொடுத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top