wwe கலக்கும் இந்தியா பெண் வீராங்கனை!!!
  • 23:34PM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 23:34PM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

நமது நாட்டில் wwe நிகழ்ச்சியைச்  சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காண்பர்..இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் தங்களுக்கு பிடித்தமான மல்யுத்த வீரரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை உண்டு  பலருக்கு.

Master.jpg

Wwe பார்க்கும் அனைவர்க்கும் கிரேட் காளி தெரியாமல் இருக்காது,அவரின் பெரிய ரசிகை ஒருவர் அவரை பின்பற்றி அவரின் புகழ் அளவிற்கே வளர்ந்து இந்த wwe போட்டியில் சாதனை படைத்துள்ளார்..அவர் தன்  wwe போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்திய பெண்மணி கவிதா தேவி ...இவர் வீரத்துக்குப் பல அண்டையர் நாட்டைச் சேர்ந்த வீரப்பெண்மணிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர்..இவர் கிரேட் காளியின் மிகப்பெரிய ரசிகை

kavita-dalal_041217052948.jpg

கவிதா தேவி ஹரியான மாநிலத்தில் உள்ள பிவானியில்  பிறந்தவர்..இவருக்குச் சிறுவயதில் குத்துச் சண்டையில் உள்ள ஆர்வத்தைக் கண்டு  அவர் தந்தை புக் சிங்க் குத்துச் சண்டை பயிற்சி கொடுத்தார்...அதன் பின் பிவானி பாக்ஸிங் கிளப் சேர்ந்த கவிதா பயிற்சியாளர்  ஜெக்டிஸ் சிங்கிடம் குத்துச் சண்டை சூத்திரங்களைக் கற்றுக்கொண்டார்..அதன் பின் ஹரியான மாநிலம் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு பல போட்டிகளை வென்றார்..

Kavitha_Devi_PTI.JPG

 

 

அதன் பின் நேஷனல் லெவல் போட்டிகளில் கலந்து பல போட்டிகளை வென்று விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் மிக உயரிய விருதான அர்ஜுனன் விருதை வென்றுள்ளார் ..இவரே ஹரியான மாநிலத்தில் அர்ஜுனன் விருதை வென்ற முதல் பெண் வீராங்கனை

pjimage (5).jpg

 

அத்துடன் நில்லாமல் இந்த வீரமங்கை wwe கால் வைத்தார்...நம் நாட்டின் கலாச்சாரம் நன்கு அறிந்த கவிதா தனது wwe போட்டிகளில் சுடிதார் சல்வார் அணிந்தே போட்டிகளில் கலந்து கொள்வர்...இதுவும் அவர் உலகளவில் பிரபலமாக ஒரு காரணம்...இவருடன் போட்டிபோடும் மற்ற வீராங்கனைகளைப் போட்டிகள் ஆரம்பித்த சில மணி நேரங்களில் விழுதி விடுவார் ..இவர் இந்தியா காவல் துறையிலும் பணியாற்றி உள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top