Misc

மீண்டும் லாக் டவுன் போடப்பட்டால் தனியார் நிறுவன ஊழியர்களின் கதி என்ன? இப்போதான் சம்பள உயர்வு தர்றோம்னு ஆசை வார்த்தை எல்லாம் சொன்னாங்களே! அதுக்குள்ளவும் இப்படியா?

Apr 29 2021 10:58:00 AM

இந்தியா முழுவதும் கொ ரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே லாக் டவுன் நடைமுறைக்கு வந்துவிட்டது. தேர்தல் முடிவுகளுக்காகத் தான் தமிழகத்தில் இன்னும் லாக் டவுன் போடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அரசாங்கத்திற்கும் ஊரடங்கு அறிவிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இந்த முறை பரவி வரும் கொ ரோனாவால் உ யிரி ழப்பு அதிகமாகி வருகிறது.

indian private company employees

எனவே ஊரடங்கு அறிவிப்பது மக்களுக்கு நல்லது தான் என்ற பேச்சும் மக்களிடையே பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இன்னொரு கருத்தும் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதாவது கடந்த முறை ஊரடங்கு அறிவித்தபோது நிறைய தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். மாதத்திற்கு சராசரியாக 10 புது ஊழியர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தும் மிகப்பெரிய நிறுவனங்களே கடந்த ஒரு வருடமாக யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை.

indian private company employees

ஒரு வேலை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் சம்பளம் கடந்த முறையைப் போன்று வருமா என்ற ச ந்தேகம் தனியார் நிறுவன ஊழியர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே கம்பெனியில் இன்னைக்கா, நாளைக்கா என்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலையும் ப றி போக வாய்ப்புள்ளது. அதேபோல நிறைய தனியார் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாக கொ ரோனா பரவல் காரணமாக தங்கள் தொழில் வளம் பெருகவில்லை என்று சம்பள உயர்வு வழங்கவில்லை.

indian private company employees

மே மாதம் முடிந்த பிறகு இரண்டு வருடங்களுக்கும் சேர்த்து ஊதிய உயர்வு வழங்குவதாக நிறைய தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி செய்திகளை வெளியிட்டுள்ளது. தற்போது மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் சம்பளம் வருமா, ஊதிய உயர்வு கிடைக்குமா, இல்ல நம்ம வேலை ப றி போகி விடுமா என்ற கு ழப்பத்தில் உள்ளனர்.

indian private company employees