SURGICAL STRIKE TEAM: இந்தியாவின் முதல் எல்லைத் தாண்டும் கமாண்டோ படை!!!
  • 18:16PM Dec 04,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

பொதுவாக வளர்ந்த நாடுகள் அனைத்துமே தங்களுக்கென ஒரு COMMANDO படைப்பிரிவை வைத்திருப்பார்கள். அமெரிக்காவிற்கு SEAL போன்ற இந்தப் படை தேசத்தின் எல்லைத் தாண்டிக் கூடப் போய் தங்கள் இலக்கைத் தாக்கும். இந்தப் படைப்பிரிவுதான் ஒசாமா பின்லேடனை நேரடியாக அவர் பதுங்கியிருந்த இடத்திலேயே சென்று சுட்டுக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்தியாவிலும் தற்போது SPECIAL COMMANDO FORCE ஒன்றை ஏற்படுத்த உள்ளார்கள். இந்தப் படைக்கு SURGICAL STRIKE TEAM என்று பெயரிட்டுள்ளார்கள். படை புதிதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே பாகிஸ்தானுக்குள்ளும், மியான்மருக்குள்ளும் (பழைய பெயர் பர்மா) சென்று நாம் அதிரடித் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.

அதில் இராணுவத்தின் பல்வேறு படைகளில் இருந்து சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இனி, அவர்கள் இது போன்ற SPECIAL OPERATION-களை மட்டும் திறம்பட நடத்துவார்கள். மத்திய அரசைக் கேட்டால், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, எல்லையை தாண்டி சென்று, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்துவதற்காக என்று தெரிவிக்கிறார்கள். ஒருவேளை SURGICAL STRIKE ஒன்றுதான் மோடிக்கும், பாஜகவுக்கும் சற்று நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது என்று நன்றிக் கடன் போல. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுவது: “ராணுவத்தில் துணை ராணுவ படை, விமானப்படையில் கருடா படை, கடற்படையில் மார்கோஸ் படை போன்ற உள்ளன. இவற்றில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்து, “SURGICAL STRIKE TEAM” உருவாக்கப்படும். பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க, எல்லையைத் தாண்டி சென்று இந்த படை திடீர் தாக்குதல் மேற்கொள்ளும்.

2016ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதை போல் இந்த படை செயல்படும். பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை, அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த, 'சீல்' படை வீரர்கள் தான் திடீர் தாக்குதல் நடத்தி கொன்றனர். அது போன்று இந்தியாவில் அமைக்கப்படும் புதிய கமாண்டோ படை செயல்படும். இந்த படை, ராணுவ தலைமை தளபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரிதான், அமெரிக்காவிடம் அணுகுண்டு இருக்கிறது என்று ரஷ்யா அணுகுண்டு தயாரித்தது. பின்னர், உலகின் உள்ள ஒவ்வொரு நாடும் தனக்கென அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்தது. இன்று உலகில் உள்ள அணுகுண்டுகள் வெடிக்க வைப்பதானால், கிட்டத்தட்ட 17 முறை ஒட்டுமொத்த உலகத்தையும் அழிக்க முடியும் என்று சொல்கிறார்கள். இப்படி “SURGICAL STRIKE TEAM”-க்கு எதிராக இனி, அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, நேபாளம், இலங்கை என்று அத்தனை நாடுகளும் இப்படி ஒரு TEAM-ஐ உருவாக்க முயன்றால் பாதகம் யாருக்கு என்பதையும் யோசித்தால் நல்லது!!!

You Might Also Like These
Related Stories
Top