இந்தியாவை உளவு பார்க்க அடுத்த ஆளில்லா விமானம்,அலார்ட்டா இருக்கும் இந்திய வீரர்கள்..! மூக்குடைந்து போகும் பாகிஸ்தான்..
  • 20:18PM Mar 09,2019 Rajasthan
  • Written By AP
  • Written By AP
  • 20:18PM Mar 09,2019 Rajasthan

கடந்த பிப்ரவரி 26 அன்று குஜராத் மாநிலத்தின் இந்திய-பாக்கிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் அருகே பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானம் நுழைந்துள்ளது. அந்த நேரம் அந்தப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் இதனைச் சுட்டுவீழ்த்தி அதனை சுக்கு நூறாக்கிவிட்டனர். இந்த ட்ரோன் விமானம் இந்திய எல்லை பகுதிகளை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை ராஜஸ்தானில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகரில், காலை 5 மணி அளவில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று நுழைந்துள்ளது.

இதைக் கண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்த முயற்சித்த போது, அது திரும்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்தது முதல் தற்போது வரை பாகிஸ்தானின் 3 ஆளில்லா விமானங்களை வீரர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Top