"ராணுவத்தில் ஓரினசேர்கையை அனுமதிக்க மாட்டேன்" இராணுவ தலைமை தளபதி தடாலடி..
  • 17:41PM Jan 10,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 17:41PM Jan 10,2019 Chennai

இந்திய ராணுவத்தில் ஓரினசேர்கையை அனுமதிக்க மாட்டேன் என இந்திய ராணுவ தளபதி Bipin Rawat காட்டமாகத் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் ஓரினசேர்க்கை அங்கீகரிக்கப்பட்டதைக் குறித்துக் கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Image result for section 377
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்" இந்திய அரசின் அத்தனைக் கட்டுப்பாடுகளையும் இந்திய ராணுவம் முழுவதுமாக மதிக்கும்,ஆனால் ராணுவத்திற்கென்று சில நெறிமுறைகள் உள்ளது.அதை மீறும் எந்தச் செயலையும் உள்ள அனுமதிக்க மாட்டேன்" என்று தடாலடியாகத் தெரிவித்தார்.
மேலும்,கள்ளத்தொடர்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறித்துக் கேட்டபோது " இந்திய ராணுவத்திற்கென்று ஓர் பாரம்பரியம் இருப்பதாகவும் அது போன்ற சம்பவங்கள் ராணுவத்தில் நடக்க வாய்ப்பில்லை" எனக் கூறினார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top