பாகிஸ்தான் எல்லையிலே பயிற்சி நடத்தி,தயார் நிலையில் உள்ளதை வெளிப்படுத்திய இந்தியா..! பாகிஸ்தானுக்கு உதறல் ஆரம்பம்..
  • 15:37PM Mar 15,2019 Delhi
  • Written By AP
  • Written By AP
  • 15:37PM Mar 15,2019 Delhi

பாகிஸ்தான் எல்லை நெடுவிலும்,இந்திய விமானப்படை தரப்பில் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றுள்ளது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து ஒத்திகைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியது, இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

நேற்றைய தினத்திற்கு முன்தினம், பாகிஸ்தானின் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், கோ சூப்பர்சோனி எனப்படும் பாகிஸ்தானின் போர் விமானங்கள் உலாவி இருந்தது இந்தியாவின் வான் பாதுகாப்பு ரேடார்களில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிகழ்வை அடுத்து, இந்திய வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் எவ்வித தாக்குதலையும் மீண்டும் எதிர்கொள்ள ஆயத்த நிலையுடன் இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படை மற்றும் விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்றிரவு ஜம்மு மற்றும் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படையின் சார்பில் தயார் நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றுள்ளது. விமானங்கள் அதிவேகமாக பறந்து தயார் நிலையில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் தரப்பில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது..

Top