Lushgreen

கண்ணாடியைப் பார்த்து தலை சீவ வேண்டும் என்கிற அவசியமே இல்லை போலயே! இவ்வளவு தூய்மையான நதி நம்ம இந்தியாவில் இருக்கா? நம்பவே முடியலையே!

Jun 03 2021 01:37:00 PM

நம்ம எல்லோருக்கும் தெரிந்த புனித மற்றும் தூய்மையான நதி என்றால் அது கங்கை நதி தான். இந்தியாவில் ஓடும் மிகப்பெரிய நதி இதுதான். வெறும் பேருக்கு மட்டும் தான் இது புனித, தூய்மையான நதி. நிஜத்தில் உலகிலேயே அதிக பேர் மாசுபடுத்தும் நதிகளில் இந்த கங்கை நதி தான் முக்கிய இடம் வகிக்கும்.

india umangoat river

வெறும் கங்கை நிதி மட்டும் தான் அனைவராலும் மாசுபடுத்தப்படுகிறதா என்றால் நம்ம இந்தியாவில் ஓடும் எல்லா நதியையும் தான் மக்கள் மாசு படுத்துகிறார்கள். வடக்கே கங்கை நதி, இங்க தமிழ்நாட்டில் காவேரி, அமராவதி நதிகளில் நம்ம சாயப்பட்டறைகாரங்க மாசுக் கழிவுகளை ஆற்றில் கலக்க விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் டுமையான சட்டங்கள் இல்லாததால் எல்லோரும் தங்கள் இஷ்டத்துக்கு ஆற்றை அ சுத்தம் செய்கின்றனர்.

india umangoat river

ஆனால் நம் இந்தியாவில் மிகவும் தூய்மையான நதி ஒன்று ஓடுகிறது. மேகாலயா மாநிலத்தில் ஓடும் இந்த நதியின் பெயர் உமன்கோட். இந்தியா பங்களாதேஷ் நாட்டு எல்லையில் இந்த நதி ஓடுகிறது. இந்த நதியின் உள்ளே என்ன பொருட்கள் உள்ளன என்பது தெளிவாக தெரியுமாம். அந்த அளவுக்கு தூய்மையாக இருக்குமாம். முகம் பார்க்கும் கண்ணாடி போல இந்த நதி மின்னும் என்பதால் அனைவரும் இந்த உமன்கோட் நதிக்கு சுற்றுலா சென்று மகிழ்கிறார்கள்.

india umangoat river