சராசரி இந்தியரின் வருவாய் எவ்வளவு தெரியுமா?
  • 19:26PM Jan 08,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 19:26PM Jan 08,2019 Chennai

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் புள்ளியில் துரையின் அமைச்சர் விஜய் கோயல் கடந்த நான்கு வருடத்தில் சராசரி இந்தியரின் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய சராசரி தனிநபர் வருமானம் முந்தைய நான்கு ஆண்டுகளின் சராசரி தனிநபர் வருவாயை விட அதிகமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி பார்க்கும் போது 2011-12 முதல் 2014-15 ஆண்டு வரை 67,594 ரூபாயாக இருந்த தனிநபர் வருவாய் 2014-15 முதல் 2017-18 ஆண்டு வரையில் 79,882 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆண்டில் 4.6 என்ற புள்ளிக்கணக்கில் தனி நபரின் வருவாய், 68,572 ரூபாயாகவும், 2014-15 ஆண்டில் சற்று உயர்ந்து 6.2 என்ற புள்ளிக்கணக்கில் தனி நபரின் வருவாய், 72,805 ரூபாயாக இருந்துள்ளது. இதில் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் தனி நபரின் வருவாய், 77,826 ரூபாயில் இருந்து 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Image result for salary

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top