DEATH SENTENCE: கடந்த ஆண்டில் 172 தூக்கு தண்டனைத் தீர்ப்புகள்!!! யாரால், ஒரு சிறப்புப் பார்வை!!!
  • 17:45PM Feb 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:45PM Feb 07,2019 Chennai

ஒரு பக்கம் ஆளும் பாஜக அரசு, பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதில் தாங்கள்தான் முன்னிலை என்று மோடியே துபாயில் நடந்த கூட்டத்தில் பெருமை பேசக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றாற் போல, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில் மிக அதிகபட்சமாக 162 தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. இது அவருடைய சாதனையா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கொடுத்த அறிவிப்பை முதலில் பார்க்கலாம். கடந்த ஆண்டு இந்தியாவில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்த புள்ளி விபரத்தை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டில் விசாரணை நீதிமன்றங்கள் 162 தூக்கு தண்டனை வழங்கி உள்ளன. இவற்றில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட 12 வழக்குகளில் 11 வழக்குகளில் கீழ் கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 22 தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2017-ல் வெறும் 6 தூக்கு தண்டனை மட்டுமே இந்த மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் விதமாக 2018-ல் POCSO ACT-ல் சட்ட திருத்தம் கொண்டு வந்ததன் காரணமாகவே இந்த மாநிலத்தில் தூக்கு தண்டனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் ஐகோர்ட்டுகளால் 55 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவையாகும். 12 வயதுக்கு கீழான சிறுமிகள் விஷயத்தில் பாலியல் குற்றங்கள் (கற்பழிப்பு) நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு POCSO சட்டப்படி, தூக்கு தண்டனை விதிப்பதென சட்டம் இயற்றப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால், இதற்குக் காரணகர்த்தா பாஜகவோ, மோடியோ அல்ல. ஏனென்றால், கதுவாவில் 8 வயதுச் சிறுமி பாலியல் வழக்கில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் போராடி மக்கள் எதிர்ப்பு காட்டியதன் விளைவாகத்தான் POCSO ACT-ல் இந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிலும் 18 வயதுக்கு கீழ் அனைவரும் மைனர் என்றால், 12 வயது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

சரி, அப்படியென்றால் இதற்கு யார்தான் பொறுப்பு. நீதிபதி செல்லமேஸ்வர ராவ் தலைமையில், அப்போதைய உச்ச நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் பேட்டியளித்த நான்கு தலைமை நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய்தான் அந்தப் பெருமைக்குரியவர். இவர் தலைமை நீதிபதிக்கான பொறுப்பில் அமரக் கூடாது என்று பாஜக எத்தனை முயற்சித்தும், சட்டப்பூர்வமாக எதிர்த்து அந்தப் பதவியைப் பெற்றவர் இவர். இவர் பதவியேற்றதும் போட்ட முதல் கட்டளையே வாய்தாக்களுக்கு எதிரானதுதான். அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கி இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கும்வரை நீதிபதிகள் விடுப்பில் செல்லக் கூடாதென்றும், அப்படிச் சென்றால், நிரந்தரமாக விடுப்பில் சென்று விடட்டும் என்று இவர் கூறியதாலேயே, இத்தனை நாட்கள் தேங்கியிருந்த வழக்குகள் மளமளவென்று முடிய ஆரம்பித்துள்ளது. நீதிபதிகளே முடிந்தளவு வாய்தா இல்லாமல் வழக்கை முடிக்க வக்கீல்களிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தானே!!!    

Top