#APEKSHAKOTHARI: பரிசுப் பொருளை வைத்தே INDIAN BOOK OF RECORDS!!! சாதித்த MANGLORE பெண்!!!
  • 15:10PM Oct 15,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:10PM Oct 15,2019 Chennai

MANGLORE-ல் HOME TUTOR-ஆகப் பணியில் உள்ள APEKSHA KOTHARI, தற்போது PEASNT EVENING COLLEGE-ல் POST GRADUATION படிப்பும் பயின்று வருகிறார். சிறு வயதிலிருந்தே, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, பரிசுகளையும் கைவினைப் பொருட்களையும் தானே தயாரித்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்படிப் பழகி வந்த இவர், YOUTUBE VIDEO-க்களைப் பார்த்து GIFT, GREETING-ஸ் உள்ளிட்ட பொருட்களையும் தயாரிக்கப் பழகியுள்ளார். இவர் தற்போது, “INCREDIBLE INDIA” என்ற CONCEPT-ல், நீண்ட EXPLOSIVE GIFT BOX-ஐத் தயாரித்ததற்காக INDIAN BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அதென்ன EXPLOSIVE GIFT BOX??? பேரே பயங்கரமா இருக்குன்னு, பயப்படாதீங்க. அது சும்மா சாதாரண GIFT BOX-தான். திறந்தால், உள்ளிருந்து நிறைய விஷயங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு வெளிவரும். அதுதான் EXPLOSIVE GIFT BOX. இந்த EXPLOSIVE GIFT BOX-ல் திறக்கத் திறக்க, இந்தியாவின் சுதந்திர வீரர்கள், சிறந்த நபர்கள் பல்வேறு மாநிலங்களின் சிறப்பு அம்சங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, புத்தர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பலரும் இந்தப் பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளனர், இந்தப் பெட்டியின் அளவீடு மூடப்படும்போது வெறும் 25 x 25 C.M. தான் இருக்கும். திறக்கும் போது, அதன் நீளம் 1,000 C.M. ஆக மாறிவிடும்.

மிக நீண்ட பரிசு மற்றும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த GIFT BOX, INDIAN BOOK OF RECORD-ல் இதற்காகவே இடம் பிடித்திருக்கிறது. இப்போதுவரை 35 வகையான GIFT BOX-களை உருவாக்கியுள்ள AAPEKSHA, இந்தப் பரிசு பெட்டியை GUINNES WORLD BOOK OF RECORDS-ல் இடம் பெற வைக்க விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எப்படியோ இந்தியாவைப் பெருமைப்படுத்த இது போன்ற திறமையுள்ள இளைஞர்கள் உருவாகிக் கொண்டு இருக்கும் வரையில், கவலைப்படத் தேவையில்லை. வாழ்த்துகள்!!!

England Guiness Record  |  Mithali Raj Unique Record  |  School Boy Record  |  Longest Nail Record  |  Expensive Saree Guiness Record  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top