#Confidence Level: உளவியல் ரீதியாக உங்களது தன்னம்பிக்கையை தட்டி எழுப்ப ஓர் புதிய முயற்சி!!!
  • 22:33PM Oct 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 22:33PM Oct 09,2019 Kodambakkam

உங்கள் நண்பர்களிடத்திலோ அல்லது புதிய நபர்களிடத்திலோ பேசும் போது உங்கள் கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை கொஞ்சம் பலவீனமானவராக எடுத்துக்காட்டலாம். மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசுங்கள். ஒருவரின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசும் போது நமக்கே ஒரு அசட்டு தைரியம் உண்டாகும். மேலும் அது உங்களை நேர்மையானவராக எடுத்துக் காட்டும். நேராக அமர்ந்து அல்லது நின்று பேசுங்கள். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். பேசும் போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்திக் கொள்வதையோ தவிர்க்கவும் காரணம் அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டலாம்.

2.jpg

சிலர் நகத்தையோ அல்லது கையில் இருக்கும் பொருளின் முனையையோ கடித்துக் கொண்டே யோசிப்பார்கள் அல்லது பேசுவார்கள் அது அவர்களை பயந்தவராக காட்டக்கூடும். நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும். குழந்தைகளோடு பேசும் போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசுங்கள். உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். பிக்பாஸ் மூன்றாவது சீசனைப் பார்த்தவர்களுக்கு தெரியும் லோஸ்லியா பேசும் போது அவர் கைகள் செய்யும் மாயம் பற்றி. உங்கள் கைகளின் சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்க உதவும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்க சில சுலபமான வழிகள் இருக்கின்றது. நீங்கள் அழகு தான் என்பதை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள். யார் உங்களை ரசித்தாலும், நீங்கள் தான் உலகில் மிகச்சிறந்த அழகை உடையவர் என்று கூறினாலும் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.

1.jpg

உங்களை நீங்களே ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாது என்று. உங்களால் எது முடியாது, உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக்கொண்டு முடித்துக்காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்… எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை… என்பதே உண்மை.

3.jpg

எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். இதுவரை உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையபேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக்கொண்டு தாங்கள் தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள் தான். அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கு இல்லவே எல்லை என்பதை முழுமையாக நம்புங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top