Exquisite

இவ்வளவு சிறப்புமிக்க வீரரை பெஞ்சில் அமர்த்தி வேடிக்கை பார்ப்பது சரியா? கோப்பை வெல்வதற்கு இவரின் திறமை உங்களுக்கு தேவையில்லையா?

Jun 06 2021 05:34:00 PM

தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் தான் இம்ரான் தாஹிர். இவர் பாகிஸ்தானில பிறந்திருந்தாலும் தென்னாப்பிரிக்க அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். லெக் ஸ்பின்னரான தாஹிர் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் இவர் தான். மேலும் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக தென்னாப்பிரிக்க அணி சார்பாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தியவரும் இவரே.

imran-tahir south-africa-player csk-2021 ipl-match

20 ஓவர் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் தாஹிர் தான். ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த தென்னாப்பிரிக்காவின் நான்காவது பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்போது 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

imran-tahir south-africa-player csk-2021 ipl-match

ஐ.சி.சி உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இம்ரான் தாஹிர் தான். ஐ.சி.சி நடத்தும் மூன்று விதமான போட்டிகளிலும் ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க மற்றும் ஒட்டுமொத்த நான்காவது வீரர் இம்ரான் தாஹிர். இவ்வளவு திறமையான பவுலரை ஏலத்தில் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக இவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்காமல் வீணடித்து வருகிறது. அணியில் இருந்த மற்றொரு சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் ஏலத்தில் கொல்கத்தா அணிக்கு சென்று விட்டார்.

imran-tahir south-africa-player csk-2021 ipl-match

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சென்னை அணி நன்றாக விளையாடி வந்தாலும் இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. சாம் கரன், இங்கிடி போன்ற பவுலர்கள் இருப்பதால் தாஹிருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சுழலுக்கு ஜடேஜா இருக்கிறார் என்றாலும் தாஹிரின் அனுபவம் அணிக்கு தேவை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. சென்னை அணிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிய போது ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பில் தொப்பி வாங்கியுள்ளார் தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.