கள்ளகாதலிக்காக மனைவியைக் கொன்ற கணவன்! அதிர்ச்சி பின்னணி!
  • 07:47AM Nov 17,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 07:47AM Nov 17,2018 Chennai, Tamil Nadu, India

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கள்ளகாதலிக்காக தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை, கணவன் திட்டம் போட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குருகிராம்-பரிதாபாத் சாலையில் அன்சல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு விக்ரம் சவுகான், அவரது மனைவி தீபிகா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தங்கி வருகின்றனர். 32 வயதாகும் தீபிகா வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் காலையில் சீக்கரம் கிளம்பி வேலைக்குச் சென்றுவிடுவார். வேலை, குழந்தைகள், கணவன் என்று இருந்த தீபிகாவுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மூலம் அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தி வந்தடைந்தது. தீபிகா வீட்டில் இல்லாத சமயங்களில் அவரது கணவர் அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவிப்பதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் தீபிகாவிடம் கூறியுள்ளனர். இந்த விஷயத்தைப் பற்றி தீபிகா தனது கணவனிடம் கேட்டுள்ளார். தீபிகா இதைப் பற்றி கேட்டதும், விக்ரம் தைரியமாக உண்மையைக் கூறியுள்ளார். அந்தப் பெண்ணுடன் இருப்பது தான் தனக்கு நிம்மதி என்றும், அவளைத் தான் தனக்குப் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை உருவாகியுள்ளது. விக்ரம், அவரது மனைவியுடன் நடக்கும் சண்டை பற்றி அவரது கள்ளகாதலியிடம் கூறியுள்ளார். அவள், தீபிகா இருப்பது தான் நமக்குப் பிரச்சனை அவளைத் தீர்த்து கட்டிடுவோம் என்று யோசனை தெரிவித்துள்ளார். இவளது யோசனையைச் சிந்தித்து பார்த்த விக்ரம், தீபிகாவை கொலை செய்ய முடிவெடுத்தார்.

Image result for illegal relationship

இதற்காக தீபிகாவிடம் கொஞ்ச நாள் சண்டைகள் இன்றி சுமுகமாக பேசிப் பழகியுள்ளார். கணவன்-மனைவி இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தனர். இந்தப் பயணத்தில் எப்படியாவது தீபிகாவை கொலை செய்ய வேண்டும் என்று விக்ரம் முடிவெடுத்து இருந்தான். ஆனால் அவனது திட்டம் நிறைவேறவில்லை. இதைப் பற்றி விக்ரம் அவனது கள்ளகாதலியிடம் கூறியுள்ளான். அவள் விக்ரமை வாட்ஸ்ஆப்பில் கண்டபடி திட்டியுள்ளாள். வீட்டிற்கு வந்ததும் கணவனுக்கு தெரியாமல் இந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அனைத்தையும் தீபிகா படித்தால். தன்னைக் கொலைசெய்ய கணவன் துணிந்துவிட்டான் என்று விக்ரமிடம் சண்டைபோட்டுள்ளார். தீபிகா வாக்குவாதம் செய்யும் போதே, விக்ரம் இதுதான் சமயம் என்று தங்கள் வசித்துவரும் 8-வது மாடி வீட்டில் இருந்து தீபிகாவை தள்ளிவிட்டார். கீழே விழுந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிர் இறந்தார். தங்களுக்குள் நடந்த சண்டையில் எதிர்பாராமல் தீபிகா விழுந்துவிட்டார் என்று விக்ரம் அனைவரிடமும் கூறினார். ஆனால் விக்ரம் மற்றும் அவரது கள்ளக்காதலி உடனான மெசேஜ்களை வைத்து இது திட்டமிட்ட கொலை என்று காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top