#IITSCHOCKER: தற்கொலைகளில் மட்டுமல்ல IIT முன்னிலை வகிப்பது இதிலும்தான்!!! DROPOUT மாணவர்கள்!!!
  • 15:18PM Apr 17,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:18PM Apr 17,2020 Chennai

IIT நிறுவனங்களுக்கும் சர்ச்சைக்கும் என்றுமே குறைச்சலில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் சமீபத்தில் FATHIMA LATHEEF என்ற கேரளப் பெண் MADRAS IIT-யில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மதப்பாகுபாடு காட்டியதாகத் தெரிய வந்தது. இது மட்டுமல்லாமல், இது போன்ற ஜாதி மதக் காரணங்களுக்காக அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெறும் MADRAS IIT-தான் அதிகத் தற்கொலைகளுடன் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. சரி, அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி ஏதாவது நடக்கிறது என்று பார்த்தால், இந்த விஷயம் எப்போதும் தொடர்கதையாகவே இருப்பது தற்போது வெளியான தகவல் மூலம் உறுதியாகி இருக்கிறது.

iit1.jpg

அது என்ன தெரியுமா??? கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட SATISTICS-ன்படி, IIT-யில் இருந்து, இந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 7,248 பேர் DROP OUT ஆகியிருக்கிறார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளதுஇது தொடர்பான தகவலை, LOKSABHA-வில் MINISTRY OF HUMAN RESOURCES AND DEVELOPMENT தெரிவித்துள்ளது. அதன் பிறகு அவர்கள் B.SC-ல் சேர்ந்திருக்கின்றனர். படிக்கும் தருணத்தில் ஏற்படும் STRESS-களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த 2 ஆண்டுகளில் 2,000 மாணவர்கள் IIT-யில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் JEE போன்ற கடினமான EXAM-களையே எழுதி இடம் வாங்க முடிந்த அவர்களால் இவர்கள் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பதில் STRESS ஏற்படுகிறதென்றால் யாரைக் குறை சொல்ல வேண்டும்???

iit0.jpg

இரண்டாவதாகச் சொன்னதைத்தான் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு 11,000 மாணவர்கள் IIT-யில் GRADUATE மற்றும் POST-GRADUATE படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது. அப்படியென்றால், IIT படிப்பு வேலைக்காகாது என்று சொல்ல வருகிறார்களா அல்லது அரசால் இவர்களுக்கு வேலை ஏற்படுத்த முடியாது என்று மாணவர்களுக்கே தெரிந்து விலகுகிறார்கள் என்று சொல்ல வருகிறார்களா என்பதுதான் குழப்பம். எதையோ மறைக்கப் போய் எதுவோ வெளி வந்த கதையாகிவிட்டது, கடைசியில்!!!

IIT JEE in Tamil  |  IITian Trackman  |  Depressive Relation  |  Exam Stress  |  IIT Hug Protest  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top