3 ஆண்டுகளுக்கு மேல் கெடாமல் இருக்கும் இட்லி - சோகத்தில் கணவன்மார்கள்..!
  • 17:28PM Feb 08,2019 Mumbai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:28PM Feb 08,2019 Mumbai

your image

நீங்க எல்லாம் பிரிட்ஜ் கண்டுபுடிக்காத காலத்திலேயே நாங்க புளி சாப்பாடு கண்டு புடிச்சு ஒருவாரம் வெச்சு தின்னவங்க.. என்று காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்லியிருப்பார். அதனையும் தாண்டி மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை வேகவைத்த உணவை கெட்டுப்போகாமல் இருக்கச்செய்ய மும்பையை சேர்ந்த பெண் பேராசிரியை புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

இட்லி, இட்லி உப்புமா போன்ற வேகவைத்த உணவு பொருட்களை எந்த வித இரசாயன பொருட்களையும் சேர்க்காமல், சுமார்  மூன்று முதல் நான்கு வருடம் வரை கெட்டுப்போகாமல் பராமரிக்க முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு பீம் ரேடியேசன் என்ற தொழில்நுட்ப முறையை தான் கண்டுபிடித்து அதனை உணவு பொருட்களின் மீது சோதித்து பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் உணவின் சுவையில் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படாது. எண்ணெயில் உருவான உணவு பொருட்கள் மற்றும் புரோட்டீன் குறைந்த உணவு பொருட்களை தனது சோதனைக்கு எடுத்துள்ளார். இந்த ஆய்வை கடந்த 2013 ஆண்டில் இருந்து மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் போன்றோருக்கு இந்த தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமையப்போகிறது. என்னதான் இருந்தாலும் பிரிட்ஜ் வந்ததில் இருந்து பிரெஷ்ஷான உணவு கணவன்மார்களுக்கு கிடைத்து வந்தது குறைந்த நிலையில், இந்த நுட்பமும் வந்து விட்டால் தங்கள் நிலமை என்ன ஆகுமோ என்று கொஞ்சம் கலக்கத்தில் தான் உள்ளனர்..!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top