Shoreline

எல்லா இடத்திலும் நமக்கு பிடிச்ச பெயரைத் தான் சொல்லி அழைப்பாங்க! இங்க என்ன இவங்களே எல்லாத்துக்கும் தனியா ஒரு பேரு வைக்கிறாங்க!

Jun 01 2021 08:31:00 AM

செல்லப்பெயர் வைத்து அழைப்பது ஒன்றும் நமக்கு புதிய விஷயம் கிடையாது. குழந்தை பிறக்கும் சமயத்தில் ஒரு பெயரை வைத்தாலும் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் என ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான பெயரை சொல்லித்தான் அழைப்பார்கள். பிறகு குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்லும் சமயத்தில் ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டு பள்ளி பதிவேடுகளில் இடம் பெறுவது வழக்கம்.

nick-name-aus

கடைசியாக ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டாலும் செல்லப்பெயர் சொல்லி அழைப்பதை அவ்வளவு எளிதில் விட்டு விட முடியாது. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கும் செல்லப்பெயர் வைப்பது இயல்பான ஒன்று தான்.

nick-name-aus

இப்படி மனிதர்கள், விலங்குகள் போன்றவற்றை பல பெயர் சொல்லி அழைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆஸ்திரேலியா நாட்டை பொறுத்தவரை அங்கு மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்லாது எல்லாவற்றையும் ஒரு வித்தியாசமான பெயரை சொல்லித்தான் அழைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. உதாரணமாக உணவை நாம் ஆங்கிலத்தில் Food என்று அழைப்போம். இங்கு Anna என்று சொன்னால் தான் உணவு என அர்த்தம்.

nick-name-aus

அவர்களுக்கும் ஆங்கில வார்த்தை தெரியும் என்றாலும் எல்லா விஷயத்திற்குமே ஒரு விசித்திரமான அல்லது செல்லப்பெயர் வைத்து அழைப்பதை ஆஸ்திரேலியா மக்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். நீங்கள் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் முக்கியமான ஒரு சில வார்த்தைகளுக்கு அவர்கள் வைத்துள்ள செல்லப்பெயர்களையும் தெரிந்து கொண்டு செல்வது மிகவும் அவசியமாகும். football என்பதை footie என்றும், afternoon என்பதை arvo என்றும் அழைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.