Timeless

இது என்ன அதிசயம்? உங்ககிட்ட ஒன்னுமே இல்லையா? அப்புறம் எப்படி பிரச்சனை வந்தா சமாளிக்க முடியும்? இதுல ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தெரியுதே!

Jun 01 2021 06:21:00 PM

ஐரோப்பாவில் இருந்து சற்று விலகியிருந்தாலும் அந்த கண்டத்திற்கு சொந்தமான ஒரு நாடு தான் ஐஸ்லாந்து. பெயரிலேயே குளுமையாக இருப்பது போல நிஜத்திலும் நல்ல குளுமையான நாடு தான் ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஐஸ்லாந்து இருக்கிறது. 2019ம் ஆண்டு கணக்கீட்டின் படி இங்கு மக்கள் தொகை வெறும் 3.57 லட்சம் மட்டுமே.

iceland-no-army

நம்ம தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களின் மக்கள் தொகையை விட இது குறைவு என்பது கவனிக்கத்தக்கதாகும். ஐஸ்லாந்து எரிமலைகள் நிறைந்து காணப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் எந்த தடையுமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

iceland-no-army

சிறிய நாடாக இருந்தாலும் பொருளாதார அளவில் ஓரளவுக்கு முன்னேறிய நாடாக ஐஸ்லாந்து இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒரு விசித்திரம் என்னவென்றால் 1869ம் ஆண்டு முதல் இங்கு ராணுவம் என்ற துறையே கிடையாது. மக்கள் தொகை குறைவாக உள்ள காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று தெரியவில்லை.

iceland-no-army

ராணுவமே இல்லாவிடினும் பாதுகாப்பு அமைப்பான நேட்டோவில் உறுப்பினராக உள்ளது ஐஸ்லாந்து. நாட்டில் ராணுவத்துறை இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது ஐஸ்லாந்து. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1950ம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து நாட்டிற்கு தேவையான ராணுவ பாதுகாப்பை அமெரிக்கா அளித்து வருகிறது.