#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா??? IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு!!!
  • 21:08PM Jul 12,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:08PM Jul 12,2019 Chennai

IBM – INTERNATIONAL BUSINESS MACHINES என்ற இந்த நிறுவனத்தைப் பற்றித் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது. குறைந்தபட்ச COMPUTER அறிவிருந்தால் கூட IBM எத்தனை பெரிய நிறுவனம் என்பது தெரியாவிட்டாலும், பெரிய நிறுவனம் என்ற அளவில் தெரியும். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே CALL FOR CODE என்ற தலைப்பில் உலகெங்கும் உள்ள மாற்று சிந்தனையாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. எதற்குத் தெரியுமா??? இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை, TECHNOLOGY & SOFTWARE-ஐ வைத்து எப்படிக் குறைப்பது என்பதற்குத்தான். இனி போட்டியைப் பற்றிப் பார்ப்போம்.

#1. நில நடுக்கம், சுனாமி, புயல், சுறாவளி, காட்டுத் தீ, எரிமலைச் சீற்றம், அதீத மழை, வெள்ளம், அதீத வெப்பம் அல்லது குளிர் போன்றவை இயற்கைப் பேரிடர்கள் என்று சொல்கிறார்கள்.

#2. பொதுச் சுகாதாரம், மருத்துவ வசதிகள், உடனடி மருத்துவம், மனநல ஆலோசனைகளுக்கு OPEN SOURCE TECHNOLOGY-யைப் பயன்படுத்தி, தகவல் திரட்டுவது, உறுப்பினர்களைத் திரட்டுவது போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

#3. இது மட்டுமல்ல, AI மற்றும் IOT போன்றவற்றுடன் வாகனங்களை இணைப்பது, ENERGY மற்றும் UTILITY-களை ஒருங்கிணைத்துத் தேவைப்படும் போது பரிமாறுவது.

#4. BLOCK CHAIN மற்றும் ARTIFICIAL INTELLIGENCE-ஐப் பயன்படுத்தி, பொருளாதார நிலை, தேவை, பங்குச் சந்தை நிலவரம் போன்றவற்றை மேம்படுத்துவது.

#5. RETAIL அதாவது பொதுச் சந்தைகளை ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப TECHNOLOGY-யைப் பயன்படுத்தி SUPPLY CHAIN LOGISTICS-ஐக் கையாள்வதற்கு யோசனைகள்.

#6. ADVANCED MOBILE TOOLS, TELECOMMUNICATIONS-ஐப் பயன்படுத்தி, தகவல் தொடர்பை நிலைப்படுத்த INNOVATIVE IDEA-க்களைக் கொடுப்பது.

#7. TRAFFIC, பருவ நிலை போன்றவற்றைக் கணக்கில் கொண்டு, DATA-வுடன் ஒப்பிட்டு, முடிந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தன்னிச்சையாகத் துவங்குதல் போன்ற காரணங்களுக்காக இவர்கள் பொதுவான போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

#8. கடந்த ஆண்டு பங்கு பெற்றவர்கள் மூலமாக 2500 புதிய APPLICATION-கள் உருவாக்கப்பட்டு பூகம்பத்தால் உருக்குலைந்து போன நேபாளம் வரை இவர்கள் உதவியிருக்கிறார்கள்.

#9. இதில் சிறப்பான திட்டத்தை அளிப்பவர்களுக்கு IBM, CALL FOR CODE AWARD-டன், 2,00,000 USD பரிசாக வழங்குகிறது.

#10. இதில்லாமல், THE LINUX FOUNDATION-லிருந்து OPEN SOURCE PROJECT SUPPORT, SOLUTION-ஐ நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விதமான SUPPORT-களும் வழங்கப்படும்.

#11. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  The Voice Show  |  Smithsonian Photo Competition  |  Mens Help-Line  |  Enterpreneurship  |  Worldwide Tamil Exams  |  

#CALLFORCODE போட்டி சாதாரணமானதல்ல. உலகெங்கும் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவற்றை வைத்து, ஒரு சிறப்பான விடையை வழங்கத் துடித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஜெயிப்பது என்பது பெரிய விஷயம்தான். ஆனால், அப்படிக் கிடைக்கும் வெற்றியால், பல நூறு உயிர்கள் காப்பாற்றப்படக் கூடிய வாய்ப்பு ஒன்று இருக்கிறதென்பதுதான் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். உங்களுக்கு ஒரு சிறப்பான IDEA இருக்கிறதா??? COMPETITION PAGE LINK

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top