Rainforest

அப்படி போடு இந்த ரணகளத்திலும் சந்தையில் விற்பனையை அடித்து நொறுக்கும் ஹூண்டாய் கிரேட்டாவின் புதிய அவதாரம்

Apr 03 2021 09:22:00 PM

ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது விற்பனையில் முன்னணியில் இருக்கும் கார் என்றால் அது ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா மாடல் தான். கண்ணைக்கவரும் விதத்தில் மிக ஸ்டைலிஷாக இருக்கும் இந்த காரில் தற்போது புது மாடல் வந்திருக்கிறது. 22 இன்ச் கஸ்டம் டிசைனுடன் கூடிய ரிம்கள் பொருத்தப்பட்டு வந்திருக்கிறது கிரேட்டா எஸ்.யூ.வி.

hyundai-creata-new

சந்தையில் அதிகம் விற்பனையாகும் இந்த கார் கொரோனா காலத்திலும் விற்பனை குறைவில்லாமல் நடைபெற்று வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 22 இன்ச் பிளாட்டி சக்கரங்கள் பொருத்தப்பட்ட முதல் கார் இதுதான். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோங்கா டயர் நிறுவனம் இந்த டயர்களை வடிவமைத்துள்ளதுஇந்த புதிய ரிம்களுக்கு ஏற்றவாறு டயர்களை சரியாய் பொருத்தி கிரேட்டாவுக்கு மேலும் மெருகூட்டியுள்ளார்கள்.

hyundai-creata-new

இந்த புதிய மாடலில் மூன்று வித இன்ஜினை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் ரெகுலர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகிய மூன்று வகைகளில் விரும்பிய வகையினை வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வண்டியின் எக்ஸ் ஷோரூம் விலை 10 முதல் 20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.