Misc

உங்களுடைய ஆசை மனைவியை எப்படி கவனித்துக்கொள்வது என்று தெரியவில்லையா? எப்போதும் சிடுசிடு என்றிருக்காமல் கொஞ்சம் இப்படி செய்து பாருங்களேன்

Jun 08 2021 06:45:00 PM

கணவன் மனைவி உறவு என்பது இன்று தொடங்கி நாளை முடியும் உறவு கிடையாது. வாழ்நாள் முழுவதும் நம்மை தொடரக்கூடிய உன்னதமான உறவாகும். சில கணவர்கள் தங்களது மனைவியை அதிகமாக நேசிப்பார்கள். ஆனால் அதை அவர்களுக்கு வெளிப்படுத்த தெரியாது. இதனால் கணவருக்கு தன்னிடம் அன்பு, பாசம் எதுவும் இல்லை என்று நினைத்துக்கொண்டு பெண்கள் கஷ்டப்படுவார்கள். இதன் விளைவாக கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகமாக நிகழும். இதை தவிர்க்க உங்களுடைய மனைவியிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே.

husband-wife happy-living healthy-relationship

முதல் விஷயம் என்னவென்றால் உங்கள் மனைவியை அனைவர் முன்னிலையிலும் வைத்து திட்ட கூடாது. இதனால் அவர்கள் மனமுடைந்து விடக்கூடும். எந்த சூழ்நிலையிலும் உங்கள் மனைவியை விட்டுக்கொடுத்து பேசக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும் சரி உங்கள் மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதால் உங்கள் அன்பை அவர் புரிந்து கொள்வார்.

husband-wife happy-living healthy-relationship

உங்கள் மனைவி கவலையாகவோ அல்லது வருத்தமாகவோ இருப்பதாய் நீங்கள் உணர்ந்தால் உடனே அவரை கட்டியணைத்து கொள்ளுங்கள். உங்களுடைய அரவணைப்பு அவர்களுக்கு ஆறுதலை தருவதோடு அவர்களுடைய கஷ்டத்தில் உங்களுக்கும் பங்குண்டு என்று அவர்களை சிந்திக்க வைக்கும்.

husband-wife happy-living healthy-relationship

திருமணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள். எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது உங்கள் அன்பை அதிகரிக்கும். வீட்டில் ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கும் சூழல் வந்தால் உங்கள் மனைவியிடமும் ஆலோசனை கேட்டு செயல்படுவது சிறந்தது.  இதனால் அவர்களிடத்தில் நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை அவர் உணரக்கூடும்.

husband-wife happy-living healthy-relationship

உங்கள் மனைவியின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுங்கள். இதனால் உங்கள் மீது உங்களுடைய மனைவிக்கு எல்லையற்ற அன்பும் காதலும் உருவாகும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு இதுவே அஸ்திவாரமாகும்