#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர்! அது என்ன ஆடை தெரியுமா?
  • 11:46AM Jul 16,2019 Madhya Pradesh
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 11:46AM Jul 16,2019 Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் கள்ளகாதலியுடன் சந்தோசமாக வாழவேண்டும் என்பதற்காக மனைவியின் ஆடையைத் திருடிய கணவன் பற்றிய செய்தி வைரலாகப் பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவரது மனைவி மத்திய பிரதேசத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இன்பத்துடன் வாழ்ந்துவந்த இவர்களது உறவில் ஒரு பூகம்பம் வெடித்தது. மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுக்கும் ஜிதேந்திர ராய்க்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Reason for Illegal affair

சாதாரணமாகப் பழகி வந்த இவர்களின் நட்புறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவி வேளைக்குச் சென்றதும் மஸ்கீட் சங்கீதாவை சந்திக்கத் தினமும் ஜிதேந்திர ராய்ச் சென்றுள்ளார். இவர்களின் உறவு முக்கியக்கட்டத்தை எட்டியதும் தனது மனைவியைப் பிரிந்து கள்ளகாதலியுடன் வாழவேண்டும் என்று ஜிதேந்திர ராய் முடிவெடுத்துள்ளார். இவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்தாலும், அதற்கான வசதி இவர்களிடம் இல்லை. இந்நிலையில் பணம் சம்பாதிப்பதற்காக ஜிதேந்திர ராய் ஒரு வித்யாசமான யோசனையில் செயல்பட்டார்.

Tips to find Illegal Affair

ஜிதேந்திர ராயின் மனைவி தலைமை காவலராகப் பணியாற்றுபவர். எனவே ஜிதேந்திர ராய் அவரது மனைவியின் சீருடையைத் திருடி அதைத் தனது கள்ளக்காதலுக்குக் கொடுத்துள்ளார். தனது கள்ளகாதலியின் பெயரில் போலி காவல் துறை அதிகாரி அடையாள அட்டைகளைத் தயார் செய்துள்ளார். அதன்பின் இருவரும் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று காவல் துறை அதிகாரி என்று கூறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது திருட்டு வேலை எப்படியோ ஜிதேந்திர ராயின் மனைவிக்குத் தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் செய்தி மத்திய பிரதேசம் முழுவதும் வைரலாகப் பரவி வந்தது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top