வீட்டில் உபயோகிக்கும் உண்டியல் பல வடிவங்களில் கிடைத்தாலும், வெளிநாட்டு விளம்பரங்கள், இணையதளங்களில் உண்டியல் தொடர்பான புகைப்படங்களை தேடினால் பன்றியின் உருவத்தில் தான் அதிகம் இருப்பதை காண முடியும். யானை, குபேரன், பானை என்று பல வடிவங்களில் நம்ம ஊரில் உண்டியல் கிடைத்தாலும், பன்றியின் வடிவத்தில் தான் அதிக உண்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.
19 ஆம் நூற்றாண்டில் உலோகத்தில் செய்யப்பட்ட உண்டியல்கள் அறிமுகமாயின. 1920 ஆம் ஆண்டுக்கு பிறகு தகர உண்டியல்கள் வந்தன. இதனை தொடர்ந்து 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு பிளாஸ்டிக் உண்டியல்கள் அறிமுகமாயின. சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க பல நாடுகளில் உண்டியல் பரிசளிக்கும் முறை தொடங்கியது.
அந்த காலத்தில் உண்டியல் செய்வதற்கு ஒரு விதமான ஆரஞ்சு நிற களிமண்ணை பயன்படுத்தியிருக்கின்றனர். அதற்கு "pygg" என்று பெயராகும். இந்த உண்டியல்கள் 17 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமைடைந்தது. பணத்தை சேமிக்க பயன்படுத்தியதால் இதனை "pygg bank" என்று அழைத்துள்ளனர். பிறகு காலப்போக்கில் அது "piggy bank" என்றாகிவிட்டது. இதனால் தான் பன்றி உருவம் வந்ததா என்று கேட்டால், அதுவும் இல்லை.
உலகின் பல பகுதிகளில் பன்றி அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டிலும், நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்ட பரிசாகவும் புத்தாண்டு பரிசாகவும் கொடுக்கப்படுகிறது. பன்றி உண்டியல் போல யானை, பூனை, ஆமை, தவளை உண்டியல் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன. ஜப்பானில் பூனை உண்டியல் பிரபலமானது. எந்த உருவத்தில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சேமிப்பு உண்டியலை piggy bank என்று தான் அழைப்பார்கள். | GENIUSHACKS: இந்தக் குறுக்குவழி உங்களுக்குத் தெரிஞ்சா, LIFE ரொம்ப EASY!!! அசால்ட்டா DEAL பண்ணலாம்!