மெல்லச்சாகும் மனித இனம்…
  • 12:27PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:27PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

தற்போது நடக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளில் மனிதனின் மலட்டுத்னம் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலின் மூலமாக நமக்கான அடிப்படைத் தேவைகளான நீரும், பருவம் தப்பிய பயிர்களால் உணவும், வாகனப் புகையால் காற்றும் மாசடைந்து வருகிறது. டெல்லியில் ஏற்பட்ட புகை மூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அரசு திண்டாடித் தவித்ததை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.  தன்னைத் தவிர வேறெதையும் பற்றிக் கவலை கொள்ளாத மனித இனம், தன்னைத்தானே மெல்ல அழித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் இருப்பது வேதனையளிக்கிறது.

பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு புதிய வியாதிகளை உற்பத்தி செய்வதிலும் நாம் தேர்ந்தவர்களாகி விட்டோம்.  ஜாம்பி கதைகள் பின்னால் இவ்வாறாகத் தடம் மாறிப் போன ஆராய்ச்சி இருக்கிறது என்று அனைத்து நாட்டினரும் நம்புகின்றனர். என்ன இதுவரை அது நிஜத்தில் நடக்கவில்லை என்று வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.  முன்பெல்லாம் மருத்துவம் என்பது வியாதிகளைக் கண்டறிந்து, மருந்துகளைக் கொடுப்பதாக இருந்தது.  இன்றோ மருந்துகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற வியாதிகளை உருவாக்கி விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது கொடுமை.

உள்ளூர் விவசாயத்தை அழித்து வெளியூர் இறக்குமதி மூலம் கமிஷன் வாங்கும் ஆசையால் நாம் செய்யும் தவறுகள், நாளை உணவுக்காக தன் வீட்டையே கூட மக்கள் தாக்கக்கூடும் எனும் அடிப்படை முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் செய்பவை.  தவறுகள் நடந்தபின்தான் திருத்திக் கொள்ள வேண்டும் என முதலில் ஆரம்பித்து, பின் அந்தத் தவறுகளை சரி செய்ய செய்யப்படும் தவறுகளாகி, இறுதியில் மாற்றவோ சரி செய்யவோ இயலாத பெரிய தவறுக்கு வழிவகுக்கும் என்பது நமது சுமூகத்தில் வளர்ந்து கிளை பரப்பிவிட்ட கேவலமான எண்ணவோட்ட செயல்பாடு. 

கெட்டது என்று அறிந்தும் சுவைக்காக அதை நான் தின்றே தீர வேண்டும் என்பது மற்றொரு விதமான தற்கொலைதான்.  அப்படி மதிகெட்டுத் தின்ற கோழிகளாலும், குடித்த பாலாலும்தான் தனக்கு நாளை சந்ததியே இல்லாமல் போய்விடும் என்ற குறைந்தபட்ச அறிவும் கூட இழந்துவிட்டு, பின்னர் மலட்டுத்தன்மைக்காக மருத்துவமனை தவறாது ஏறி இறங்கி என்ன பயன்.  மரங்களை எல்லாம் மருந்தாகவும், பொருளாகவும், பேப்பராகவும் வசதியாகப் பார்த்து இன்று சுத்தமான ஆக்ஸிஜன் ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் என அனுபவிக்கும் மக்களை என்னவென்று சொல்வது.

மொத்தத்தில் இயற்கை மறந்து, தன்னை மறந்து, தேவை மறந்து இங்கே இனி – மெல்லச் சாகுது மனித இனம்…      

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top