தேர்தல் நெருக்கத்தில் கனிமொழி, கதிர் ஆனந்துக்குப் புதிய சிக்கல்! உயர்நீதிமன்றத்தில் திடீர் புகார்..!
  • 11:06AM Apr 13,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:06AM Apr 13,2019 Chennai

வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.கட்சிகள் அனைத்தும் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முழுவீச்சு காட்டி வருகின்றனர்.இந்நிலையில்,திமுகச் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழியை எதிர்த்தும் வெள்ளோரில் போட்டியிடும் கதிர் ஆனந்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Case agianst Kanimozhi and kathir anand

ராமந்தபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர் தொடுத்த மனுவில்,"தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.ஆனால்,தூத்துக்குடியில் கனிமொழி பிரச்சாரம் செய்யும் இடங்களிலெல்லாம் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர்.அதேபோல் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்தும் பொது மக்களுக்குப் பணம் கொடுத்துள்ளார்.அதுமட்டுமின்றி அவர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

Image result for madurai high court
ஜனநாயக முறையில் நடக்கவேண்டிய தேர்தலை சீர்குலைத்த கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top