Timeless

#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு!

Sep 20 2019 10:07:00 PM

கரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறு கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் அதிலுள்ள மாசுக்களையும், மொலசஸ் எனப்படும் உடன் விளைபொருளையும் நீக்க பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கந்தக ஈராக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், கால்சியம் ஹைட்ராக்சைடு, பாலி அக்ரைல் அமைடுகள் என இத்தனை ரசாயனம் கலந்து வெள்ளை சர்க்கரை தயாராகிறது. இதில் கூறப்பட்ட ஒவ்வொரு ரசாயனமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது கிடையாது. கூறப்பட்டது எல்லாமே விஷத்துக்கு சமமாகும். ஆனால் நம்ம ஊரில் பரம்பரியமாக வெல்லம் தயாரிக்கும் போது நரி வெண்டை எனப்படும் ஒரு காட்டு வெண்டைக்காயின் சாறு சேர்க்கப்படுகிறது. இது கரும்பு சாற்றிலுள்ள மாசுக்களை அகற்றுகிறது. அடுத்து விளக்கெண்ணை சேர்க்கப்படுகிறது. இறுதியாக சோடியம் ஹைட்ரோ சல்பைட், சோடியம் ஃபார்மால்டிஹைடு சல்பாக்ஸிலேட் எனப்படும் உடலுக்கு தீங்கு தராத வேதி பொருள் சேர்க்கப்படுகிறது. அது எப்படி தயாராகிறது என்பதை அடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம்.

Jaggery Production Process

#White Sugar: இப்படி உருவாகும் இயற்கை இனிப்பு சுவையை விட்டுவிட்டு, தினம் தினம் நாகரிகம் என்ற பெயரில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணவின் வாயிலாக விழுங்கி கொண்டிருக்கிறோம். | நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா??? கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா?