Misc

#Veg: சைவ சாதம் சாப்பிடும் பழக்கம் தோன்றியது ஏன்? அடுத்த ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள் இதை படிக்கலாம்!

Oct 11 2020 09:56:11 AM

எனக்கு இந்த ஜென்மமே போதுமடா சாமி! அடுத்த ஜென்மம் வேண்டாம் என்று கருதுபவர்கள், ஆன்மீக ரீதியாக முக்தி அடைய விரும்புவர்கள், கர்ம வினை ஏற்படும் என்ற காரணமாக பிற உயிர்களை கொல்வதில்லை. இந்து மதம் மட்டும் அல்ல, உலகின் பிறமதங்களும் கொல்லாமையை வலியுறுத்துகின்றன. பிற உயிர்களுக்கு நாம் செய்யும் பாவம் சிறு உயிரியில் இருந்தே தொடங்குகிறது. உதாரணத்துக்கு ஒரு எறும்பை கொன்றால் கூட, அது உங்கள் கர்மவினையில் சேர்ந்துவிடும்.

food myth veg

பசுவின் உயிரை எடுப்பது, ஒரு மனிதனை கொல்வதற்கு சமமாகும். அதற்கேற்ற கர்மவினையை அனுபவிக்க நேரிடும். இந்த பிறவியில் நீங்கள் அசைவ உணவு பிரியராக இருந்தால், உங்களது முந்தைய பிறவி மிருகமாக இருந்திருக்கக்கூடும். அதனை பிரதிபலிப்பு தான், இந்த ஜென்மத்தில் உங்களுக்கு மாமிச உணவு சாப்பிடும் வேட்கையை கொண்டு வந்துள்ளது. இதனை ஆன்மீக ரீதியாக அணுகிப்பார்ப்பவர்கள் "ஜென்ம வாசனை" என்று குறிப்பிடுவார்கள்.

food myth veg

இந்த பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆன்மாகவுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்றால், உங்கள் வாழ்வில் தினம் தினம் சேரும் கர்மவினையின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டுமாம். ஏதாவது உயிர் பிரிய நீங்கள் காரணமாக இருந்தாலோ அல்லது மறைமுகமாக அதற்கு சம்பந்தப்பட்டிருந்தாலோ, உங்களது வாழ்வின் கர்மவினை சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் ஆன்மாவின் போராட்ட காலம் அதிகரிக்கும். அவ்வளவு எளிதில் முக்தி நிலையை அடைய முடியாது.

food myth veg

ஆன்மீக நாட்டம் கொண்ட சிலர் தோலினால் செய்யப்பட்ட காலணி அணிய மாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு பின்னால் உள்ள காரணமும் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கத்தோன்றுகிறது. இன்னமும் உள்ளூர் கோவில் சிலவற்றிக்கு சென்றால், மரத்தால் செய்யப்பட்ட காலணி இருக்கும். ஒரு சில கோவில்களில் மரத்தால் செய்யப்பட்ட காலணிகள் மீது ஆணி அடிக்கப்பட்டிருக்கும். தெரியாமல் கூட ஒரு உயிரை மிதித்து கர்மவினையாக மாறிவிடக்கூடாது என்பதை, அவை உணர்த்துவதாக தோன்றுகிறது.