ஜியோ மொபைல்கள் – உண்மையில் இலவசமா???
  • 09:02AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:02AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் புதிய 4G போன்களை இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளது தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது முதலில் நாம் 1500 ரூபாய் செலுத்த வேண்டும். செலுத்திய பின் தற்போது சோதனையில் இருக்கும் ஜியோ போன் வெளி வந்தவுடன் உங்களுக்கு ஒரு போன் வழங்கப்படும். நீங்கள் செலுத்திய தொகை 3 வருடங்களில் திருப்பித் தரப்படும். மாதா மாதம் ரூ. 153 க்கு நீங்கள் வழக்கம் போல ஜியோ 4G சேவைகளை அனுபவித்துக் கொள்ளலாம்.  28 நாட்களுக்கு ஜியோ Apps அனைத்தும் இலவசம் என்ற பல்வேறு அறிவிப்புகள் பயனீட்டாளர்களை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. உண்மையிலேயே, ஜியோ போன் இலவசம்தானா???

சிறிது நாட்களுக்கு முன் எனது வணிக நண்பர் ஒருவர் “இலவசம் என்று சொல்வதே கூட ஒரு வியாபார யுக்திதான்” என்று கூறினார். அதாவது நமது மக்களின் ஈடுபாடு, இலவசம், தள்ளுபடி போன்ற வார்த்தைகளில் அதிகம் இருப்பதால் அவை கார்பரேட் நிறுவனங்களில் புதிய வணிக திட்டமாகி விட்டது. ஜியோவிலும் அப்படித்தான்.  உதாரணமாக. ஒரு 30 லட்சம் பேர் ஜியோ போன் முன்பதிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நபர் ஒன்றுக்கு 1500 என்றால் 30 லட்சம் பேரின் வைப்புத் தொகை மட்டுமே 450 கோடி ரூபாய். ஒரு புதிய நிறுவனத்தினை துவங்கி, உற்பத்தியைத் துவங்க போதுமான தொகை இது. பற்றாக்குறைக்குச் சிறிய அளவிலான தொகையை வங்கி மூலமோ. சொந்த பணத்தின் மூலமோ பெற்று விட முடியும். 

அதுவும் கூட பின்னால் இந்தப் போனை வாங்கும் நபர்களிடம் வாங்கும் தொகை மூலம் திருப்பிச் செலுத்தப்படும். 153 ரூபாய் மற்றும் பிற ரீசார்ஜ்களின் மூலம் கிடைக்கும் லாபம் மிகை லாபம்தான்.  அதிலும் கார்ப்பரேட் புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது.  உற்பத்தி உறுதியாக விற்பனை செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, திரும்பக் கிடைக்கும் வைப்புத் தொகைக்காக 3 வருடம் வாடிக்கையாளராக இதில் குறைந்தபட்சம் 80 சதவீதம் இருப்பர்.  அவர்கள் மூலம் லிக்விடிட்டி எனப்படும் பணவரத்து 3 வருடங்களுக்கு உறுதி செய்யப்பட்டு விடும்.  கடன்கள் முடிந்த நிலையில் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டியும் லாபத்தில் அடங்கும். 

இதையெல்லாம் விடப் பெரிய லாபம் ஒன்று இருக்கின்றது. இதே முறையில் செயல்படும் பங்குச் சந்தையில் முதலீடு கோரினால் இவ்வளவு பெரிய தொகைக்கு ஷேர்கள் கொடுத்து, அவர்களுக்கு டிவிடெண்ட் மற்றும் விற்கையில் லாபம் என கணக்கில் உள்ளபடி அதிகப்படி பணம் கொடுக்க வேண்டும்.  ஆனால் இந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீட்டை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும்.  லாபம் கம்பெணிக்கு… இப்படி கணக்குப் பார்த்தால், நாம் பங்குதாரராய் இருக்க வேண்டிய கம்பெணியின் வாடிக்கையாளராய் மட்டும் இருந்து கொண்டு பொருளை வாங்கியவனாக இருக்கப் போகிறோம்… 3 வருடங்களுக்குப் பிறகு கம்பெணியின் அனைத்துச் சொத்து பரிவர்த்தனைகளும் அம்பாணி அவர்களுக்கே சொந்தமாகிவிடும்.

இப்பொழுது முழுவதுமாய் படித்துவிட்ட பிறகு சொல்லுங்கள் – நீங்கள் வாங்கும் ஜியோ உண்மையிலேயே இலவசம்தானா???  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top