Misc

வெள்ளைத்துணியில் கறை என்று வெசனப்படாதீங்க! வெள்ளாவி வைத்து வெளுக்கும் இரகசியம் கண்டுபிடிச்சாச்சு! உங்களுக்கு மட்டும் சொல்றேன், காதை காட்டுங்க!

Oct 13 2020 12:43:54 PM

சிறு வயதாக இருக்கும் போது மதுரையில், வெள்ளைத் துணிகளை வெளுக்க 'வெள்ளாவி' வைக்கணும்னு யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். யாருன்னு தான் சரியா நியாபகம் வரல. ஒரு பத்து வருடத்திற்கு முன்னால், வெள்ளை சட்டை போட்டு, கருப்பு பேண்ட் அணிந்தால் கெத்து என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எல்லாம் இந்த சினிமாவால் வந்த வினைங்க. அதற்காக ஆசை ஆசையாய் ஒரு வெள்ளை சட்டை வாங்கி, ஒரே சட்டையை அடிக்கடி அயர்ன் பண்ணி போட்டுக்கொண்டிருந்தேன்.

dress-wash dress wash

அந்த மாதிரி கிளாத், பக்கத்தில் வேறு எந்த கடையிலும் கிடைக்கவில்லை என்பதால், ஒரு சட்டையை மட்டுமே நம்பி இருந்தேன். ஒருமுறை, ஊற வைத்து துவைக்கிறேன்னு அம்மா செய்த வேலையால், என்னுடைய வெள்ளை சட்டை வீணா போச்சு. நீல கலர் ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்த சாயம் அப்படியே சட்டையில் இறங்கி, எதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியது. அம்மா மேல ஒரு பக்கம் கோபம் என்றாலும், அவங்க அறியாமையால் செய்த தவறு தானேன்னு சொல்லி பெருசா எதுவும் சொல்லல.

dress-wash dress wash

என்னுடைய தோழியின் தாத்தா சாயப்பட்டறை வைத்திருப்பதால், சும்மா நாச்சிக்கும் இப்படி ஆயிருச்சே தாத்தான்னு சொல்லிட்டு இருந்தேன். அட பயலே! இதெல்லாம் ஒரு பிரச்சனை வந்து சொல்லுறியே, போய் சட்டை எடுத்துட்டு வா பாத்துக்கலாம் என்றார். என்ன சாயம் போட்டு கலர் சட்டையா மாற்றிக்கொண்டுப்பாரென நினைத்துக்கொண்டிருந்தேன். கொண்டு வந்த ஒரு மணி நேரத்தில் வெள்ளை வெளீரென புது சட்டை போல மாற்றி கையில் கொண்டு வந்து கொடுத்தார். எப்பவும் தாத்தா மாதிரி ஆட்களின் தோற்றத்தை வைத்து, திறமையை மதிப்பிடக்கூடாது.

dress-wash dress wash

எப்படித் தாத்தா என்று கேட்டேன். நீ இரசாயனத்தைப்பற்றி படித்திருப்பையே, எல்லாம் அதோட செயல் தான் என்றார். கடையில் வீச்சுப்பொடி என்று கேட்டு வாங்க வேண்டுமாம். அதனுடைய அறிவியல் பெயர், சோடியம் ஹைட்ரோசல்பைட். சுடுதண்ணீருக்குள் இந்த பொடியை போட்டு, கறை படித்த துணியை, அதில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துவிட்டால், பளிச்சிடும் வெள்ளைத்துணி ரெடியாகிவிடும். பட் ஒரு கண்டீசன், இது வெள்ளைத்துணிகளுக்கு மட்டும் தான். கலர் துணியை இதில் ஊறவைத்தால், அதன் நிறத்தை இழக்க வேண்டிவரும். கடைசியா இன்னுன்னு சொல்ல மறந்துட்டேன், அந்த ரசாயனத்தை மூக்கின் அருகில் வைத்து, நுகர்ந்து பார்க்கக்கூடாது. 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்கெளா?' என்ற பாடல் வரி கூட, இதனை மையப்படுத்திதான் எழுதியிருப்பாங்கன்னு தோணுது.