#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது!!!
  • 14:35PM Jul 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:35PM Jul 09,2019 Chennai

நாம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள் பெரும்பாலும் விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நாமும் விஷ கலப்போடுதான் அவைகளை வாங்கி வருகிறோம். இந்தக் காய்கறிகளை அப்படியே சமைத்துச் சாப்பிட்டால், பல்வேறு பக்க விளைவுகள் தோன்றும். பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளைச் சமைப்பதற்கு முன்னால் எப்படிச் சுத்தப்படுத்துவது என்று பார்ப்போம்.

#1. கொத்தமல்லித் தழையில் வேர்ப்பகுதியை நீக்கி விட்டு, சமையலுக்குப் பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாகக் கிள்ளி எடுங்கள். அதை TISSUE PAPER-லோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, PLASTIC பாத்திரத்தில் கொட்டி FRIDGE-ல் வைக்கலாம்.

#2. முருங்கைக்காய், பீட்ரூட், கேரட் போன்றவைகளைப் பலமுறை தண்ணீரில் கழுவி, காட்டன் துணியை சுற்றி FRIDGE-ல் வையுங்கள். தேவைப்படும் போது வெளியே எடுத்து, மேல் தோலை லேசாகச் சுரண்டிவிட்டு, நன்றாகக் கழுவிப் பயன்படுத்துங்கள்.

#3. வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய் போன்றவைகளைத் துணி துவைக்கப் பயன்படுத்தும் மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவி அலசிவிட்டு, VINEGAR அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்துவிட்டு பின்பு கழுவித் துடைத்துப் பயன்படுத்துங்கள்.

#4. காலிபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாகப் பெயர்த்து அவைகளை VINEGAR அல்லது உப்பு திரவத்தில் பத்து நிமிடம் முக்கி வைத்துவிட்டு, பலமுறை கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

#5. மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்திருங்கள். பின்பு கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரைத் துணியால் துடைத்துவிட்டுப் பயன்படுத்துங்கள்.

#6. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Eco-Robotix  |  Potato Politics  |  Day of Sparrows  |  Bottle Gourd Benefits  |  Organic Food Habits  |

#MUSTKNOW என்றால் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷங்கள் என்று அர்த்தம். நம்மால் அனைத்து நேரங்களிலும் ORGANIC PRODUCE-களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. பெரும்பாலானவர்களால், அதை வாங்கவும் முடியாது. குறைந்தபட்சம், விஷத்தன்மையையாவது சற்று குறைத்துப் பயன்படுத்தலாமே???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top