#popsicles: சம்மரில் குழந்தைகளை சர்ப்ரைஸ் செய்ய செலவில்லாத சிம்பிள் ஐடியா !
  • 20:29PM May 04,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:29PM May 04,2019 Chennai

இந்த சம்மரில் வெயிலின் தாக்கம் ரொம்பவே அதிகம். அதீத கோடை வெப்பத்தை தாங்கும் அளவிற்க்கு உடலை ரெடியாக வைத்து கொள்ள வேண்டும்.அவ்வப்போது இளநீர்,தர்ப்பூசணி,நுங்கு போன்ற ஆரோக்கியம் நிறைந்த குளிர்ச்சி உணவுகளை உண்டு கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் உடல் வெப்பத்தை தாங்காது தலைவலி, மயக்கம் ,உடல் சோர்வு போன்றவற்றை நேர்கொள்ள வேண்டியிருக்கும்.பெரியவர்களாக இருப்பின் மேற்சொன்ன உணவு பொருட்களை உண்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது..அதுவே குழந்தைகளாக இருப்பின் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் டேஸ்ட்டாக இல்லையெனில் உண்ண மாட்டார்கள்..குழந்தைகளுக்கு இந்த உணவுகளை விதவிதமாக டெக்கரேட் செய்து கொடுத்தால் தான் உண்பார்கள். அந்த வகையில் சத்து நிறைந்த பழ வகைகளை கொண்டு popsicles செய்து கொடுக்கும் போது வெயிலுக்கு இதமானதாகவும் இருக்கும் அதே வேளையில் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்

How to make popsicles

#popsicles: கடைகளில் விற்பனை செய்யப்படும் popsicles முழுக்க முழுக்க இயற்கை பழ சாறு கொண்டு எந்தவிதமான ரசாயன கலப்பு இல்லாமல் செய்யப்படுகிறதா என்பது சந்தேகமே..அப்படி இருக்க காணொளியில் உள்ளவாறு நாமே செய்யும் போது குழந்தைகளுக்கு நல்லது தான் கொடுக்கிறோம் என்ற நம்பிக்கை உருவாகும்..

Top