#Attract Wife: மனைவியை மயக்க வேண்டுமா.? ஒரே வார்த்தையில் வலையில் வீழ்த்தும் சமாச்சாரம்!
  • 16:48PM Aug 13,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:48PM Aug 13,2019 Tamil Nadu

பெண்களுக்கு எப்போதும் தான் நேசிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சேலை கட்டினால், 'ப்பா! எவ்வளவு அழகா இருக்க நீ?! இன்னும் அப்படி ஒரு டிசைன் இருந்திருந்தா நல்லா இருக்குமே' என்று சொல்வதை தான் எதிர்பார்ப்பார்கள். உப்பு காரமே இல்லாத சமையலாக இருந்தாலும் கூட, 'ராசாத்தி நீ வெச்ச அமிர்தம் மாதிரி இருக்கும்ன்னு' சொல்லி பாருங்க. கவனிப்பே தனி ரகமா இருக்கும்.

எல்லாம் முன்ன பின்ன தான் இருக்கும். நமக்கு எப்படி சமைக்க அவ்வளவா வராதோ, அந்த மாதிரி தான் அவங்களுக்கும். நம்ம அம்மாவும் கல்யாணம் ஆன புதுசுல ருசியா சமைச்சு இருப்பாங்கன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா? அந்த மாதிரி தான் போக போக பழகிக்குவாங்க. அது புரியாம ஆரம்பத்துலையே நம்ம மாப்பிள்ளைகள் 'ஆங்கிரி பேர்டா' மாறினா குடும்பத்துல விரிசல் தான் விழும். ஒரு விசயத்த எப்படி எடுத்துக்குறோம் என்பதுல தான் சூட்சமம் அடங்கி இருக்கு.

காலையில காப்பி கொண்டு வந்து கொடுக்கறாங்கன்னு வெச்சிக்குவோம். அதுல எறும்பு உள்ள கிடக்குது. உடனே தாம், தூம்ன்னு கத்தறவங்க ஒரு ரகம். அவங்க குடும்பத்துல எப்ப பார்த்தாலும் சண்ட வந்துகிட்டே இருக்கும். ஒருத்தர ஒருத்தர் அனுசரித்து போக தெரியாது. சின்ன விசயத்துக்கு எல்லாம் வாக்குவாதம் முத்தி போயி பெரிய சண்டைல கொண்டு வந்து முடிப்பாங்க. அப்பறம் பொண்ணு வீடு, மாப்ள வீடு பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்கு வருவாங்க.

அடுத்து இதே மாதிரி ஒரு சீன் தான். காலையில காப்பி கொண்டு வந்து கொடுக்கறாங்க. அதுல எறும்பு உள்ள கிடக்குது. அத பார்த்த உடனே கணவன், 'எறும்பை எடுத்து மனைவிகிட்ட காண்பித்து, உன்னோட காபிக்கு நான் மட்டுமே தான் ரசிகன்னு நினச்சேன். ஆனால் உயிரையே விடுமளவு ரசிகன் ஒருவன் இருக்கிறான், என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்னு சொல்றாங்க. இத கேட்ட உடனே மனைவிக்கு சந்தோசம். கூடவே அடுத்து ஜாக்கரதைய கொண்டு வரணும்னும் புரியுது. இந்த ரெண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியணும். எந்த மாதிரி வாழ்க்கை வாழ நீங்க ரெடின்னு. | இரவில் தனியாக பயணிக்கும் பெண்களிடம் இப்படியும் நடந்துக்கறாங்களா? செமி ஸ்லீப்பர் பஸ்சில் அரங்கேறும் கோரம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top