Misc

#nattusakkarai: வெல்லத்திற்கும் நாட்டு சர்க்கரைக்கும் என்ன வித்தியாசம்? இவற்றிலும் கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

Oct 16 2020 12:20:22 PM

ஈரோடு மாவட்டம், கோபி செல்லும் வழியில் புளியம் பட்டி அருகே நாட்டு சர்க்கரை தயாரிக்கும் இடத்தை பார்த்த போது, உடனே உள்ளே சென்று சர்க்கரை எப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது. அங்கு வெள்ளை சர்க்கரை பார்க்க பளபளவென இருந்தது, நாட்டு சர்க்கரையோ செம்மண் நிறத்தில் இருந்தது. 

nattu-sakkarai refresh-drink

பிறகு அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம், வெள்ளை சர்க்கரை குறித்து ஏன் இந்த சர்க்கரை மட்டும் இவ்வளவு பளபளப்பாக உள்ளது என கேள்வி எழுப்பிய போது, ச ல்பர் என்ற வேதிப்பொருள் கலப்பதாலே அந்த நிறம் கிடைக்கப்பெறுவதாக கூறினார்கள்.

nattu-sakkarai refresh-drink

இந்த செயல் முறையில் முதன்முதலில் கரும்பு சாறு எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த சாறு கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கையில் ஏதாவது கசடு இருந்தால் அது பெரிய கரண்டி கொண்டு துலாவி வெளியே எடுக்கிறார்கள். சோடா சேர்த்து மேலும் உள்ள கழிவுகளை நீக்குகிறார்கள். 

nattu-sakkarai refresh-drink

அடுத்து கால்சியம் சத்திற்காக சுண்ணாம்பு சேர்க்கிறார்கள். பின்னர் இந்த கரும்பு பாலை தனியே கொப்பரையில் வைத்து உலர செய்கிறார்கள். இப்போது இதனை உலர வைத்தால் நாட்டு சர்க்கரை ரெடி. கடைகளில் இதன் விலை தெரியவில்லை. இங்கு கிலோ 60 ரூபாய். நாட்டு சர்க்கரையில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம் நிறைந்து இருப்பதால், எலும்புகளுக்கு நல்லது. இர த்தத்தை சுத்தம் செய்வதிலும் முக்கிய பங்குண்டு. 

nattu-sakkarai refresh-drink

வெல்லத்திற்கும் நாட்டு சர்க்கரைக்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இரண்டுமே ஒன்றுதான். இரண்டிற்கும் பதம் மட்டுமே மாறுபடும். வெல்லத்தில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என வேறுபடும். உருண்டை வெல்லத்தில், கட்டி வெல்லம், பாகு வெல்லம் என வேறுபாடு உண்டு. உடலுக்கு நல்லது, ஊட்டச்சத்துக்கள், குறைவான கலோரிகள் இவற்றின் அடிப்படையில், முதல் தரம் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை, இரண்டாம் தரம் வெள்ளை சர்க்கரை. 

nattu-sakkarai refresh-drink

காபி, டீ, இனிப்பு செய்ய என எல்லாவற்றிற்கும் கருப்பட்டி சிறந்தது. விலை சற்றே கூடுதல் என்பதால் கட்டுப்படி ஆகாதவர்கள், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நாட்டு சர்க்கரை நல்ல தேர்வு. 

nattu-sakkarai refresh-drink

தினமும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலியை சுடுநீரில் கொதிக்கவைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் வேறு எந்த ஒரு புத்துணர்ச்சி பானமும் தேவையில்லை. அதுமட்டுமின்றி அன்றாடம் எடுத்துக்கொண்டால் சருமம் இளமையாகவே இருக்கும். 

nattu-sakkarai refresh-drink

தயாரிக்கும் இடத்திலே சென்று வாங்கினால் கண்டிப்பாக கலப்படம் இருக்காது. விற்பனை சங்கிலியில் எங்கேயோ தான் தவறு நடக்கும். இவைகளில் கலப்படம் கண்டுபிடிப்பது எளிதல்ல. உப்புக்கரித்தால் கெ மிக்கல்ஸ் அதிகம் என்பது மட்டும் கண்டுபிடிக்கலாம்.