Misc

#crudeoil: சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறியலாம்?

Oct 27 2020 11:38:13 AM

தலைமுறை தலைமுறையாக தமிழகத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய, கடலை எண்ணெய் பயன்படுத்தி வருகிறோம். வட மாநிலங்கள் பக்கம் கடுகு எண்ணெய், கேரளா பக்கம் தேங்காய் எண்ணெய் என அந்ததந்த பகுதியில் விளைபவை கொண்டு, எண்ணெய் தயாரித்து உணவில் சேர்த்து கொண்டிருந்த வரை உடல் ரீதியான எந்தவித பிரச்சனையையும் யாரும் சந்திக்கவில்லை. 

crude-oil cooking-oil

தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்துவிட்டு, அது உசத்தி இது உசத்தி, இதயத்திற்கு நல்லது  சூரியகாந்தி எண்ணெய், கொழுப்பை குறைக்கும் அரிசி தவிட்டு எண்ணெய் என ஏதேதோ சந்தைப்படுத்தப்பட்ட பின்னர் தான் மக்களும் பழமையை மறந்துவிட்டார்கள். ஆனால் இப்போதுள்ள மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் இவற்றை எல்லாம் யோசித்தால், இந்த புதுவித எண்ணெய்கள் வரவில்லை என்றால், சுத்தமான கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விலை விண்ணை தொட்டிருக்கும். 

crude-oil cooking-oil

பெரும்பாலும் இன்று கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெயானது குரூட் ஆயிலின் கடைநிலை கழிவான மினரல் ஆயில் என தெரிந்திருந்தும் சிலர் அறியாமல் வாங்குகின்றனர். சிலர் தெரிந்தே வேறு வழியில்லாமல் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஏனெனில் தூய செக்கு எண்ணெய் விலை அதிகம். குரூட் ஆயில் என்றவுடன் உடனே பெட்ரோல் கழிவு என யோசிக்க வேண்டாம். பெட்ரோல் கழிவையும் குரூட் ஆயில் என்றே சொல்வார்கள். தயாரிப்பு அடிப்படையில் உள்ள விதிப்படி, முதல் நிலை எண்ணெய என்றால் பாக்கெட்டுகளில் குரூட் என்றே பதிக்க வேண்டும். குரூட் என்ற வார்த்தையை பார்த்ததும் உடனே இது பெட்ரோலிய கழிவு என தவறாக எண்ண கூடாது. ஆங்கிலத்தில் பெட்ரோலிய கழிவு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படும் வடிகட்டி சுத்தம் செய்யப்படாத முதல் நிலை எண்ணெய்யை கூட குரூட் ஆயில் என்றே கூறுவார்கள்.

crude-oil cooking-oil

சரி, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறியலாம்? எப்போதும் போல் தான் போலியின் விலை அசலை விட குறைவாக இருக்கும். எண்ணெய் வாங்கி எத்தனை மாதங்கள் ஆனாலும் நிறம், மணம், திடம், சுவை மாறாமல் இருக்கும். இயற்கைக்கு மாறாக இல்லையென்றால் கண்டிப்பாக அதில் மாற்றம் தென்பட்டிருக்கும். இதில் எல்லாம் மாற்றம் தென்படவில்லை எனில், அந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது உடலில் மாற்றம் கண்டிப்பாக தென்படும் அதை வைத்தும் கண்டுபிடித்து விடலாம்.