#BettaFish பைட்டர் மீன் இனத்தில் ஆண், பெண் பாலினத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
  • 18:54PM Oct 15,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:54PM Oct 15,2019 Chennai

மண்டை வெடிக்கும் அளவுக்கு மனஅழுத்தம் இருந்தாலும் சிலநிமிடங்கள் தொட்டிக்குள் சுற்றி வரும் மீன்களைப் பார்த்தால் போதும் அந்த மனஅழுத்தம் சற்று குறைந்துவிடும். வீட்டின் அழகுக்காக மட்டுமின்றி, ராசிக்காகவும் சிலர் விலைஉயர்ந்த மீன்களை வாங்கி வளர்ப்பார்கள். மீன் வளர்ப்பில் சிறுவர்களும், இளைஞர்களும் தான் அதிக நாட்டம் இருக்கும். பொதுவாகக் கோல்ட் பிஷ், ஏஞ்சல் பிஷ், டைகர் பிஷ், மோலி போன்றவையே அதிகமாக வாங்கி வளர்ப்பார்கள். இதில் பைட்டர் பிஷ் மட்டும் தனியாகவே வளர்ப்பார்கள். இந்தப் பைட்டர் மீன்கள், தனியாக மட்டுமே வளரக்கூடியதாகும். இதனுடன் இன்னொரு பைட்டர் மீனை விட்டால் இரண்டும் சண்டைபோட்டுக்கொள்ளும். பைட்டர் மீன் மீது ஆர்வம் அதிகம் இருப்பவர்கள் அதனைச் சிரியத்தில் இருந்தே வளர்க்க வேண்டும் என்று முயற்சிப்பார்கள். இப்படிச் சிறிய பைட்டர் மீன்களை வாங்கும் போது பெரும்பாலானவர்கள் அது ஆணா அல்லது பெண்ணா என்று குழப்புவார்கள்.

#TikTok : இணையத்தை கலக்கும் டிக் டாக் பட்டி

How to Find Betta Fish Gender

கடையில் இருப்பவர் என்னதான் கூறினாலும் நமக்கு அந்தச் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். பைட்டர் மீன் இனத்தில் ஆண், பெண் பாலினத்தை எப்படிக் கண்டுபிடிக்கவேண்டுமென்றால், ஆண் பைட்டர் மீன்களின் மேல் துடுப்புப் பெண் பைட்டர் மீன்களின் துடுப்பை விடப் பெரியதாக இருக்கும், அதேபோலக் கீழ் துடுப்பும் பெண் பைட்டர் மீன்களின் துடுப்பை விடப் பெரியதாக இருக்கும். இதேபோலப் பெண் பைட்டர் மீன்களுக்குக் கீழ்ப்பகுதியில் குட்டி பை போன்ற பகுதி இருக்கும். ஆண் பைட்டர் மீன்கள் இருக்கும் பிஷ் பௌலில் அதிகமாகக் குமிழி இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top