#Thunderstorm Safety preparation: இடி மின்னலின் போது இந்த மாதிரியான சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? குழந்தைகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது?
  • 21:17PM May 03,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:17PM May 03,2019 Chennai

பள்ளிகளும்,கல்லூரிகளும் வாழ்வியலுக்கான அத்தனை அறிவையும் நமக்கு புகுத்தி விடுவது இல்லை.ஒரு சிலவற்றை நாம் அனுபவம் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது,இல்லையெனில் அனுபவசாலிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.ஆபத்தான விலங்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது,காட்டு தீ போன்ற சூழலில் முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன, கடுமையான வெள்ளம்,இடி மின்னலின் போது எப்படி செயல்பட வேண்டும் இவையெல்லாம் பாட சாலைகள் கற்று தர மறந்தது,நடைமுறை வாழ்க்கையில் நமக்கு அவசியமானது..அந்தவகையில் இடி மின்னலின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்..

திறந்த வெளியில் இடி மின்னல் ஏற்பட்டால் முடிந்தவரை கூட்டத்தோடு நிற்காமல் விலகி நிற்கலாம்.கனமான பேரொளியாக இருக்கும் பட்சத்தில் முட்டியை மடக்கி குத்து கால் போட்டு அமர்ந்து கொள்ளலாம்..அதிக இடைவெளி விட்டு அமர்ந்து கொள்வது மிக சிறப்பானது.

அடுத்து எல்லோருக்கும் தெரிந்தது தான்,மரத்தடியில் நிற்க வேண்டும் என சொல்வார்கள்,அது மிகவும் ஆபத்தானது. 1 மீட்டர் இடைவெளியில் மரத்திலிருந்து தள்ளி நிற்பது நல்லது.

அடுத்து கட்டிட சுவர்களின் ஓரங்களில் நிற்பதும் ஆபத்தானது.கட்டிடத்தின் உள்ளே நிற்பதுவே பாதுகாப்பானது. கார் போன்ற வாகனங்களின் உள்ளே இருப்பது சிறந்த பாதுகாப்பு. ஒரு சிலர் காரில் உள்ளே இருப்பார்கள், பேரிடியாக இருக்கும் போது பயந்து கொண்டு வெளியே வந்து விடுவார்கள்..அப்படி வெளிவரும் போது நிலத்தில் விழும் இடி ,நம்மில் இறங்க பார்க்கும்..கார் ஒரு மூடிய சர்கியூட் போல அமைவதனால் இது மிகவும் பாதுகாப்பானது..மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற அறிவுரைகள் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top