#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா?
  • 18:29PM May 22,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:29PM May 22,2019 Chennai

மாலை மங்கும் நேரம், காதலியுடன் ஈ.சி.ஆரில் நீண்ட பைக் ரைட், ஓய்வெடுக்க ரெசார்ட்டில் ஏ.சி ரூம், ஜில்லென்ற காற்று, காதலியின் பார்வையில் ஒரு தயக்கம்கலந்த மயக்கம், எப்போதும் இல்லாமல் அவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தனிமை. கால் முதல் தலை வரை புரியாத ஒரு உணர்வு, உடம்பில் ஒரு கிளர்ச்சி. அவள் பக்கத்தில் வந்ததும், இழுத்து அணைத்து கட்டிப்பிடித்து ஓராயிரம் முத்தத்துடன் புரண்டு உறவுகொள்ளவேண்டும் என்று தோன்றும், ஆனால் அதற்குள் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் இதற்குத் தயாரா என்ற கேள்வி எழுந்தாள் அந்தச் சமயத்தில் நீங்கள் என்ன செய்விர்கள்?

 

இப்போதுள்ள இளைஞர்கள் பலருக்கு பொதுவாக உள்ள சந்தேகம் செக்ஸ் வாழ்க்கைக்குதான் தயாரா என்பது தான். அதிலும் சில இளைஞர்களுக்குத் தான் செக்ஸ் வாழ்க்கைக்குத் தயார் என்பதுகூடத் தெரிவதில்லை. ஆனால் மனரீதியாகப் பொறுத்தவரையில் இந்தக் குழப்பம் ஏற்படுவது சகஜம் தான். முதன்முறை செக்சில் ஈடுபடும் அனைத்து இளைஞர்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றும். இந்தக் குழப்பத்திற்குச் சரியான முடிவை நீங்கள் மட்டுமே எடுக்கமுடியும். பொதுவாக இப்படி யோசிக்கும் ஆண்கள். மூன்று விஷயங்கள் அடிப்படையாக வைத்து யோசிப்பார்கள். குடும்பம், பாதுகாப்பு, அதன் பின் ஏற்படும் பிரச்சனை.

 

செக்ஸுக்குப் பின் அந்தக் காதலியுடன் காதலை தொடர்வதும், காதலை முறித்துக் கொள்வதும் அந்த இளைஞன் கையில் தான் உள்ளது. ஒருவேலை காதல் திருமணம் வரை சென்றால் பிரச்சனை இல்லை, ஆனால் காதல் பாதியில் முறிந்து இந்த விஷயம் கசிய தொடங்கினால் இருவருக்குமே பிரச்சனை. தன்னைப் பயன்படுத்தித் தூக்கி எறிந்துவிட்டான் என்று அந்தப் பெண் உங்கள் வீட்டிற்கு வந்தால் குடும்பமானம் கப்பல் ஏறிவிடும். இதனை அனைத்தையும் யோசிக்கும்போது அந்த இளைஞன் குழம்புவன். ஆனால் தற்போது இந்தக் குழப்பங்கள் சகஜமாகிவிட்டது. செக்சிற்கு இருவரும் சம்மதம் தெரிவித்துவிட்டபின் பிரச்சனை இல்லை.

 

இதனைத் தொடர்ந்து ஆண்கள் அதிகம் கவலைப்படுவது, பாதுகாப்பு. காண்டம் குறித்த பாதுகாப்பல்ல, செக்சில் ஈடுபடக் கஷ்டப்பட்டு அழைத்துவந்தாலும் எங்குச் செய்யப்போகிறோம், எப்படிச் செய்யப்போகிறோம், திருப்திப்படுத்த முடியுமா போன்ற பலகேள்விகள் ஆண்களின் எண்ணத்தில் ஓடும். கஷ்டப்பட்டு ரூம் ரெடி செய்து, காதலியையே யார் கண்ணிலும் படாமல் அழைத்துவருவது வரை ஒருமிகப்பெரிய போராட்டமாக இருக்கும். அதன்பின் முக்கியமானது காதலியை திருப்தி படுத்தமுடியுமா என்பது! நூற்றில் எழுவது சதவீத பெண்கள் செக்சில் திருப்தி அடைந்ததில்லை என்று கூறுகிறார்கள். எனவே தன்னால் திருப்தி படுத்தமுடியுமா என்ற குழப்பம் ஆண்களிடம் இருக்கும்.

 

செக்ஸ் உறவில் ஈடுபடும் போது காண்டம் அவசியம். பல ஆண்களைக் கவிழ்த்துவிடுவது காண்டம் தான். சில ஆண்களுக்குக் காண்டம் போட்டும் மனதில் பயமிருந்து கொண்டே இருக்கும். செக்சில் சில சமயங்களில் பாதுகாப்பு எடுத்தும் தவறு நடப்பது சகஜம் தான். அதற்காக யோசித்துக் கொண்டே இருப்பது தவறு. அதேபோலச் சில ஆண்களுக்குச் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் இடம் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் இருக்கும். இவை அனைத்தையும் தெளிவுபடுத்திய பின் உறவில் ஈடுபடுங்கள். பயத்துடன் உறவில் ஈடுபட்டால், நினைத்த ஒன்றுமே நடக்காது! இதுபோன்ற சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டாலே நீங்கள் செக்சிற்குத் தயார். மற்றபடி எப்படி, எந்தப் பொசிஷனில் உறவு கொள்ளவேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கவேண்டும்.

Top