#EXAMSTRESS: பரீட்சை பயத்தால் ஏற்படும் EXAM STRESS??? மாணவர்களும், பெற்றோர்களும் இதனை எதிர்கொள்வது எப்படி???
  • 16:42PM Apr 30,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:42PM Apr 30,2019 Chennai

நேற்று முன்தினம் சற்றே வித்தியாசமான ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்த போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. SSLC தேர்வு முடிவுகள் வெளிவரும் வேளையில், ஒரு மாணவி, தோல்வி பயத்தால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், வெளிவந்த தேர்வு முடிவு, அவள் எத்தகைய முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கிறார் என்பதை உலகுக்குச் சொல்லியது. ஆம், அந்தத் தேர்வில், தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி, நல்ல மதிப்பெண்களுடன் PASS செய்திருக்கிறார். கடந்த வருடம் வரை, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதான் தற்கொலை செய்தனர். அதில் பெரும்பாலானோர், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் தற்கொலை செய்தனர். ஆனால், இந்த மாணவியோ, தேர்வு முடிவு என்ன ஆகுமோ என்ற பயத்தில், அதாவது EXAM STRESS-னால் உயிரை விட்டிருக்கிறார்.

இதை எதிர்கொள்வது எப்படி??? முதலில், இதைப் பெற்றோர்களிடத்தில்தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பொதுத்தேர்வு என்பது முழு வாழ்க்கைக்கான தேர்வு அல்ல. இதில் தோற்றால், பின்னர் எல்லாவற்றிலும் தோற்றதாக ஆகாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான ஒரு மாயத்தோற்றத்தை மாணவர்களிடம் விதைப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. அதற்காக அப்படியே விட முடியுமா என்று கேட்க வேண்டாம். படிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்லத்தான் வேண்டும். ஆனால், அதை OVER EMPHASIZE செய்ய வேண்டாம். அதுவே வாழ்க்கை என்ற ரீதியில் பயமுறுத்தாதீர்கள். தேர்வு எழுதி முடித்த பின்னர், மாணவர்களின் பயத்தைப் போக்க முயற்சி செய்யுங்கள்.

EXAM STRESS-ஐ நீக்குவதற்கு முக்கியமான விஷயம், பெற்றோர்கள் என்ன ஆனாலும், தங்களைப் புரிந்து கொள்வார்கள், தங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள் என்ற மாணவர்களின் எண்ணம்தான். அதை மீண்டும் மீண்டும் பரீட்சை முடிந்த பின்னர், RESULT வரும் வரை புரியுமாறு பேசுங்கள். அதை விட்டுவிட்டு, குறைந்த மார்க் எடுத்தால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன், திருமணம் செய்து வைத்து விடுவேன் போன்று மிரட்டுவது, அவர்களது STRESS-ஐத் தேர்வு எழுதிய நேரத்தை விட, RESULT வெளிவரும் நேரத்தில் அதிகமாக்கி விடுவதுதான் இத்தகைய தற்கொலைகளுக்குக் காரணமாக முடிகிறது. இதைப் போல மாணவர்களுக்கும் சில விஷயங்கள் சொல்லியாக வேண்டும்.

 

முதலில் உங்களை நீங்கள் ஆழமாக நம்புங்கள். எத்தகைய நிலையிலும் உங்களால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதத்தில் அமைத்துக் கொள்ள முடியும் என்று நம்புங்கள். படிப்பு அதற்கு ஒரு கருவி மட்டுமே என்பதையும் உணர்ந்து அதற்கேற்றவாறு அதைப் பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். பின்னர் முடிவு எப்படியாக இருந்தாலும் கவலைப்படாதீர்கள். தைரியமாக எதிர்கொள்ளப் பழகுங்கள். பெற்றோர்கள் ஆதங்கத்தால் மட்டுமே பேசுகிறார்கள் என்பதை உணர்ந்தால், பிறகு இந்தத் தற்கொலை எண்ணம் வராது. ஒருவேளை தோல்வியடைந்தால், உங்களுக்குச் சரியாக வராத பாடத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் படிக்க வாய்ப்பு கிடைத்ததாக எண்ணுங்கள். ஒருமுறையேனும் தோல்வியைச்சந்திக்காத வெற்றியாளர்கள் யாரும் கிடையாது என்பது புரிந்தாலே போதும், தன்னம்பிக்கை தானே வரும். புரிகிறதா???

Depression Causes Obesity  |  Police Stress  |  Stress Versus Accupuncture  |  Moodrise App  |  Anger Management  |  

Top